Seetha Raman : மகா செய்த வேலையால் கோபமான ராம்.. சீதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seetha Raman : மகா செய்த வேலையால் கோபமான ராம்.. சீதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Seetha Raman : மகா செய்த வேலையால் கோபமான ராம்.. சீதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Divya Sekar HT Tamil
Jun 19, 2023 02:50 PM IST

சீதா ராமன் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்ப்போம்.

சீதா ராமன் சீரியல்
சீதா ராமன் சீரியல்

இந்த சீரியலில் நடந்த சனிக்கிழமை எபிசோடில் ராம் சீதாவின் காலை பிடித்து விட சீதா தூக்கம் கலைந்து எழுந்து பாஸ் என்ன பண்றீங்க என்று கேள்வி கேட்ட நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

சீதாவின் கேள்வியை தொடர்ந்து ராம் நீ ரொம்ப நல்ல பொண்ணு நீ ஜெயிக்கிறதுக்காக என்னால எந்த அளவுக்கு சப்போர்ட் பண்ண முடியுமோ அந்த அளவுக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன் என சொல்கிறான்.

இதை கேட்டு சீதா சந்தோஷப்படுகிறாள், அதே சமயம் எனக்கு இந்த போட்டியை நெனச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு என்று பேச ராம் நீ எதுக்காக இந்த போட்டியில் கலந்து கொண்டு இருக்கிறாய் என்பதெல்லாம் என்னிடம் சொல்ல வேண்டாம். ஆனால் நான் உனக்கு சப்போர்ட் பண்ணுவேன் என்று சொல்ல சீதா எனக்கு இது போதும் பாஸ் நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணாலே நான் ஜெயித்து விடுவேன் என்று சந்தோஷப்படுகிறாள்.

மறுநாள் காலையில் சீதா மற்றும் ராம் என இருவரும் பரத நாட்டியம் பிராக்டிஸ் கிளம்ப சீதா முத்தாரம்மனை வணங்கி விட்டு வருவதாக பூஜை அறைக்கு செல்ல ராம் தயாராகிக் கொண்டிருக்க இதனை அறிந்த மகா கேட்டை போட்டு சாவியை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பி விடுகிறாள்.

ராம், சீதா வெளியே செல்லும் போது கேட் பூட்டு போட்டு இருப்பதை பார்த்து செக்யூரிட்டியிடம் கேட்க அவன் மகா கேட்டை பூட்டி சாவி எடுத்துக் கொண்டு சென்று விட்டதாக சொல்ல ராம் சித்தி எதுக்காக இப்படி பண்றாங்க என கோபப்படுகிறான்.

மதுமிதா மகாவுக்கு பரிந்து பேச ராம் சீதா என்னுடைய பொண்டாட்டி நான் அவளுக்கு சப்போர்ட் பண்ணுவேன் என பதிலடி கொடுத்து மதுமிதாவை ஆப் செய்கிறான். சித்தி வரட்டும் இன்னைக்கு அவங்க கிட்ட கேட்கிறேன் என சீதா உடன் சேர்ந்து காத்துக் கொண்டிருக்கிறான்.

அதன் பிறகு மகா வந்ததும் ராம் அப்படியே பம்பி விட சீதா என்ன நீங்க ஏதோ கேக்குறன்னு சொன்னீங்க இப்ப அமைதியா இருக்கீங்க என்று கோபப்பட மதுமிதா நீ எதுக்கு அவரை ஏத்தி விடுற என சத்தம் போட சீதா அவர் என்னுடைய புருஷன் இது எனக்கும் அவருக்குமான விஷயம் என சொல்லி மதுமிதாவை அடக்குகிறாள்.

அதன் பிறகு மகாலட்சுமி நீ எதுக்கு இவ கூட வெளியே போயிட்டு இருக்க உனக்கு ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு மதுமிதாவை கூட்டிக்கிட்டு கிளம்பு என்று சொல்கிறாள். நீ ப்ராக்டிஸ் பண்ணி அப்படியே ஜெயிச்சு கிழிக்க போற பாரு என மகா சீதாவை அவமானப்படுத்த சீதா ஏன் உங்களுக்கு நான் ஜெயிச்சிடுவேன்னு பயம் வந்துருச்சா என கேள்வி எழுப்ப மகா பதட்டம் அடைந்து உள்ளே செல்ல சீதா துரையிடம் அந்த பரதநாட்டியம் மாஸ்டர் இப்போ இங்க வந்து ஆகணும் என சொல்கிறாள்.

பிறகு துரை குடி போதையுடன் இருக்கும் மாஸ்டரை வீட்டுக்கு கூட்டி வர மகா இதை பார்த்து குடிச்சிட்டு ஆடுறதுக்கு பேரு பரதநாட்டியமா என கோபப்பட்டு அந்த மாஸ்டரை வெளியே போக சொல்கிறாள்‌. இந்த நேரம் பார்த்து மதுமிதா அவர ஒரு ஸ்டெப் போட சொல்லுங்க நல்லா இருந்தா மகாவே உள்ளே கூப்பிடுவாங்க என்று சொல்ல அந்த மாஸ்டர் டான்ஸ் ஆட தயாராகிறார்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.