Karthigai deepam: படுத்த படுக்கையில் அபிராமி..திரும்பி வரும் தீபா?.. காய் நகர்த்தும் கீதா! - கார்த்திகை தீபம் அப்டேட்!-zee tamil karthigai deepam serial latest today september 4 2024 episode update indicates what is real face of deepa - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: படுத்த படுக்கையில் அபிராமி..திரும்பி வரும் தீபா?.. காய் நகர்த்தும் கீதா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: படுத்த படுக்கையில் அபிராமி..திரும்பி வரும் தீபா?.. காய் நகர்த்தும் கீதா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 04, 2024 11:20 AM IST

Karthigai deepam: திரும்பி வரும் தீபா? கார்த்தியால் ஷாக்கான ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Karthigai deepam: படுத்த படுக்கையில் அபிராமி..திரும்பி வரும் தீபா?.. காய் நகர்த்தும் கீதா! - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: படுத்த படுக்கையில் அபிராமி..திரும்பி வரும் தீபா?.. காய் நகர்த்தும் கீதா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

கார்த்திகை தீபம் அப்டேட் 

அதாவது, கீதா எஸ்கேப் ஆன நிலையில், போலீஸ் அவளை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று கிளம்புகின்றனர். மறுபக்கம் ஹாஸ்பிடலில் இருக்கும் அபிராமி கண் விழிக்க, குடும்பம் மொத்தமும் அவளை பார்க்க உள்ளே வருகிறது. 

கண் விழித்த அபிராமி கார்த்திக் தீபா கல்யாணம் முடிந்ததா என்று கேட்க, அருணாச்சலம் உண்மையைச் சொல்ல வந்தார். ஆனால் டாக்டர் அவரை தடுத்து நிறுத்திவிட்டார். இந்த சமயத்தில் கார்த்திக், மீனாட்சிக்கு போன் போட்டு தீபா கிடைத்து விட்டதாகவும், சிறு காயங்கள் இருப்பதால், அவள் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்கிறான்.

பணக்காரி கீதா

இதற்கிடையே வரும் ஃபிளாஸ்கட்டில் கீதா, பணக்கார வீட்டு பெண் என்பதும், அவள் பெரிய பிசினஸ் வுமன் என்பதும் தெரிய வருகிறது. தொடர்ந்து கார்த்திக் அவளைதான் தீபாவாக நடிக்க அழைத்து வருகிறான் என்பதும் தெரிய வருகிறது. 

இதை தொடர்ந்து மீனாட்சி ஐஸ்வர்யாவிடம் வந்து, எதுக்கு இப்படி பேசிட்டு இருக்க? தீபா திரும்ப வருவது பிடிக்கலையா என்று கேட்க, ஐஸ்வர்யா ஷாக்காகி சமாளித்தாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன? 

ஹோட்டலில், கார்த்திக் தீபா உருவத்தில் இருந்த பெண்ணை பார்க்காமல் இருந்த நிலையில், கார்த்திக் திரும்பிப் பார்க்க, அந்த பெண்ணின் முகம் தெரியாமல் இருந்தது. அப்போது முருகன் வடிவத்தில் இருந்த சிறுவன், அதெல்லாம் நீ எதுக்கு பாக்குற, ஏதாச்சு தப்பு பண்ணி இருப்பாங்க என்று கூறினான். 

இங்கே தீபா வேடத்தில் இருக்கும் கீதா, விதவிதமாக ஆடர் செய்து வெளுத்து கட்ட, போலீஸ் என்னம்மா இப்படி சாப்பிடுற என்று கேட்டார்கள். அதற்கு, இன்னும் கொஞ்ச நேரத்துல என்னை கொல்ல போறீங்க; எனக்கு புடிச்சது சாப்பிட்டுக்கிறேன் என்று சொல்லி சமாளித்தாள். ஆனால், அவளின் திட்டம், கண்டதை சாப்பிட்டு வாந்தி எடுத்து போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆகி விட வேண்டும் என்பதாக இருந்தது. அதன்படியே, கீதா வாந்தி எடுத்து போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பித்து ஓடினாள். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.