Sadhguru Speech: ஆன்மீகம் அறிவோம்.. ‘சுவாசம் ஏன் விடுதலைக்கான பாதை’- சத்குரு
நீங்கள் சற்று அதிகமான கவனமுடையவரானால், சுவாசமானது இயல்பாகவே உங்கள் விழிப்புணர்வுக்குள் வந்துவிடும். நான் சுவாசத்தை அனுபவித்து உணரத் தொடங்கியபோது எனக்கு ஆறு அல்லது ஏழு வயதாக இருந்தது.

Why Breathing is the path to liberation says sadhguru jaggi vasudev
சுவாசத்தின் செயல்பாடு குறித்தும், அதனை எப்படி மாபெரும் சாத்தியங்களுக்கான வாயிலாகப் பயன்படுத்த முடியும் என்பது குறித்தும் கோவை ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் கூறும் கருத்துக்கள் இவை!
சுவாசத்தில் விழிப்புணர்வு
சத்குரு: ஒருவரது விழிப்புணர்வு தேவையான கூர்மையும், தீவிரத்தன்மையும் அடைந்தால், அவர் இயல்பாகவே விழிப்புணர்வு பெறும் முதன்மையான விஷயங்களுள் ஒன்று சுவாசம். இடைவிடாமலும், தொடர்ச்சியாகவும் உடலில் இயந்திரகதியான ஒரு செயலாக சுவாசம் இருக்கும் நிலையில், அதைப் பற்றிய உணர்வில்லாமல் பெரும்பாலான மனிதர்களும் எப்படி வாழ்கின்றனர் என்பது உண்மையில் வியப்பானது. ஆனால் சுவாசம் உங்களது விழிப்புணர்வுக்குள் வந்துவிட்டால், அது ஆச்சரியமூட்டும் வழிமுறையாகிறது.