MTV Splitsvilla X5: காதலர்களுக்குள் குட்டையை குழப்பிய உர்ஃபி ஜாவேத்! சன்னி லியோன் டேட்டிங் ஷோவில் தெறிக்கும் சம்பவம்
திடீரென என்ட்ரி கொடுத்த உர்ஃபி ஜாவேத், ஸ்பிளிட்ஸ்வில்லாவில் இருக்கும் காதலர்களுக்குள் குட்டையை குழப்பியதுடன் சில தெறிக்கும் சம்பவங்களையும் அரங்கேற்றினர். இதனால் இந்த வார சன்னி லியோன் டேட்டிங் ஷோ எபிசோட் அனல் பறக்கும் விதமாகவே இருந்தது.

எம்டிவி மற்றும் ஜியோ டிவி ஓடிடியில் ஒளிபரப்பாகும் ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 15 டேட்டிங் ரியாலிட்டி ஒளிபரப்பாகி வருகிறது. இதை பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், நடிகர் தனுஜ் விர்வானி தொகுத்து வழங்குகிறார்கள். இதன் லேட்டஸ்ட் எபிசோடில் வில்லாவில் ஜாலியாக டேட்டிங் செய்து கொண்டிருந்த காதலர்களுக்கு மத்தியில் கண்ணி வெடி வைத்து குட்டையை குழப்பி விட்டார் மிஸ்சீஃப் மேக்கரான உர்ஃபி ஜாவேத்.
காதலர்களுக்கு மத்தியில் சண்டை
இந்த ஷோவையே தலைகீழாக மாற்றுகிறேன் பாருங்கள் என சவால் விட்டு இந்த வாரம் நிகழ்ச்சிக்குள் அடியெடுத்து வைத்த உர்ஃபி ஜாவேத் காதலர்கள் மத்தியில் சண்டை வரும் அளவுக்கு ஏகப்பட்ட டாஸ்க்குகளை கொடுத்து நிகழ்ச்சியின் போக்கையே முற்றிலுமாக மாற்றி ரசிகர்களுக்கு தரமான என்டர்டெயின்மென்ட்டை கொடுத்துள்ளார்.
ஏற்கனவே உர்ஃபி ஜாவேத் கொடுத்த டாஸ்க்கில் ஹர்ஷை தனியாக காதல் குகைக்கு வரவழைத்து, ஸ்பிளிட்ஸ்வில்லன்களிடையே பிரச்னையை கிளப்புவதாக அந்த போர்ஷன் செம ட்விஸ்ட்டாக அரங்கேறியது.