நவம்பர் மாதத்தில் ஓடிடியை தெறிக்க விடப்போகும் தமிழ் படங்கள்! இனி கொண்டாட்டம் தான்!
திரையரங்குகளில் வெற்றி பெற்ற படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகின்றன. இந்த வரிசையில் நவம்பர் மாதம் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியலை தொகுப்பை இங்கு காண்போம்.

சினிமாவின் பரிணாமமும், வளர்ச்சியும் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதன் மாபெரும் வளர்ச்சியாக கருதப்படுவதே ஓடிடி தளங்கள். திரையரங்குகளுக்கு சென்று டிக்கெட் எடுத்து ஒரு திரைப்படத்தை பார்க்க வேண்டும். ஆனால் நமது வீட்டில் இருந்தே நல்ல hd தரத்தில் ஒரு படத்தை பார்க்க விரும்பினால் அதற்கு ஓடிடி தளம் ஏற்றதாகும். குறிப்பாக கரோனா காலகட்டத்தில் ஓடிடி தளங்கள் மிகவும் பிரபலம் அடைய தொடங்கியது. தற்போது வரை பல படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. திரையரங்குகளில் வெற்றி பெற்ற படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகின்றன. இந்த வரிசையில் நவம்பர் மாதம் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியலை தொகுப்பை இங்கு காண்போம்.
வேட்டையன்
ரஜினிகாந்தின் சமீபத்திய திரைப்படமான வேட்டையன் பெரிய திரையில் வெளியாகி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இந்த மாதம் அமேசான் பிரைம் வீடியோ OTT தளத்தில் வெளியிடப்பட உள்ளது. தமிழ் ஆக்ஷன்-த்ரில்லர் ஆக வெளிவந்த வேட்டையன் 2024 ஆம் ஆண்டில் ஒரு தமிழ்த் திரைப்படத்திற்கான சிறந்த ஓபனிங் என்ற சாதனையைப் படைத்துள்ளது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்தபடி செயல்படத் தவறிவிட்டது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றாக நடித்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் நவம்பர் மாதம் 7 அன்று வெளியாக உள்ளது.
தங்கலான்
சியான் விக்ரம் நடிப்பில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்த் திரைப்படமான தங்கலான், நெட்ஃபிக்ஸ் இல் திட்டமிடப்பட்ட OTT வெளியீடு செயல்படாததால் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை எந்த வித தகவலும் வெளியாக வில்லை. தங்கலான் படத்தின் மீது போடப்பட்ட வழக்குகளே படம் வெளியாக தடையாக இருந்து வருகிறது. அனைத்து வழக்குகளும் தீரும் பட்சத்தில் இந்த மாதம் உறுதியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.