இன்றைய டாப் தமிழ் ஓடிடி படங்கள்! டாப் வரிசையில் கெத்துக் காட்டும் படங்கள்!
ஓடிடி தளத்தில் வெளியாகி டாப் வரிசையில் இடம் பிடித்துள்ள தமிழ் படங்களின் பட்டியலை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் பல படங்கள் வெளியாகின்றன. அது படத்தின் கதை, நடிகர்களின் நடிப்புத்திறன், சிறைந்த திரைக்கதை என பல காரணிகளால் மக்களால் அப்படங்கள் விரும்பப்படுகின்றன. பெரிய நட்சத்திர ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும் சிறந்த திரைக்கதையை மட்டுமே மக்கள் வரவேற்கின்றனர். திரையரங்குகளில் வெற்றியான பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி அங்கும் சிறப்பாக ஓடி வருகின்றன. திரையரங்குகளுக்கு வர இயலாதவர்கள், அவர்களது விருப்ப ஹீரோக்களின் படங்களை பார்க்கத் தவறியவர்கள் என பலர் ஓடிடி தளத்தையே பெரிதளவில் நம்பி இருக்கின்றனர்.
ஓடிடி தளத்தின் வளர்ச்சி
கரோனா தொற்றின் போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த ஓடிடி தளங்கள், அதற்கு முன்பாகவே 10 ஆண்டுகளாக இருந்து வந்தன. ஆனால் இவை நோய்த்தொற்று காலத்தில் இருந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக அதிகமாக பயன்படுத்தப்பட்டன. மேலும் பல படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவும் செய்தன. இன்றளவும் பல வெப் சீரீஸ்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன.
நெட்பிளிக்ஸ்
உலக அளவிலான பல மொழித் திரைப்படம் வெளியாகும் தளமாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் உள்ளது. இந்தியாவிலும் நெட்பிளிக்ஸ் தளத்திற்கு சிறந்த வரவேற்பு இருந்து வருகிறது. இந்த தளத்தில் இந்திய அளவில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டடு வரும் படங்கள் வரிசைப் படுத்தப்படுகின்றன. அதில் இடம் பெற்றிருக்கும் படங்களில் தமிழ் படங்களும் உள்ளன.
