Rajinikanth: இனி துறவறம்தான்.. முடிவெடுத்த ரஜினி.. முட்டுக்கட்டை போட்ட பாலசந்தர் செக்.. - ரஜினி மாடர்ன் பாபாவான கதை!
ரஜினி துறவறம் செல்ல முடிவெடுத்த கதையையும், அதற்கு பின்னால் நடந்தவற்றையும் இங்கு பார்க்கலாம்.
(1 / 5)
ரஜினி துறவறம் செல்ல முடிவெடுத்த கதையையும், அதற்கு பின்னால் நடந்தவற்றையும் இங்கு பார்க்கலாம். (wikipedia)
(2 / 5)
40 வருடங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் லதா ரஜினிகாந்தை அழைத்து தான் துறவறம் சென்றால் எப்படி இருக்கும் என்று கேட்டார். விளையாட்டாகத்தான் சொல்கிறார் என்று பார்த்தால், ஒரு கட்டத்தில் அவர் சீரியஸாகத்தான் சொன்னார் என்பது தெரிந்தது. அப்போது ஒரு படத்தில் நடிப்பதற்காக பாலச்சந்தர் ரஜினிகாந்திடம் செக் ஒன்றை கொடுத்து வைத்திருந்தார்.
(3 / 5)
துறவறம் செல்லலாம் என்று முடிவெடுத்த உடன் அதனை அவரிடமே திருப்பிக்கொடுத்து விடலாம் என்று எண்ணி, பாலச்சந்தரிடம் அந்த செக்கை கொடுக்க சென்றார் ரஜினி.
(4 / 5)
இதைப்பார்த்த பாலச்சந்தர் செக் உனக்கு நான் கொடுத்தது. அதனை நீயே வைத்துக்கொள் என்று கூறி விட்டார். இல்லை என்று ரஜினி மறுக்க... பாலச்சந்தர் இப்போது செல்லும் உனக்கு ஒரு 10 நாட்களில் மனம் மாறக்கூடும். மாறினால் நீ திரும்பி வரும் போது எனக்கு படம் செய்... அதற்காக இந்த செக் உன்னிடமே இருக்கட்டும் என்று சொன்னார்.
(5 / 5)
இந்தத்தகவல் வெளியே கசிந்த நிலையில், ரஜினி வீட்டின் முன்பே கூட்டம் கூடி விட்டது. அப்போது எஸ்.பி முத்துராமன் ரஜினியை கையை பிடித்து அழைத்து கூட்டத்தைக் காண்பித்து இவர்களுக்கு நீ என்ன செய்தாய் என்று கேட்டார். அப்போது அங்கிருந்த ஒரு பேன் தலைவா நீ சினிமாத்துறையை விட்டு போகிறாய் என்றால் இங்கேயே நான் தீக்குளித்து விடுவேன் மண்ணெண்ணெய் ஊற்றி நிற்க,அதன் பின்னர் ரஜினியின் மனம் மாறியது (நன்றி ஆகாயம் தமிழ்!)
மற்ற கேலரிக்கள்