THEATRE RELEASE: வரிசைக்கட்டி நிற்கும் படங்கள்.. கோலிவுட்டில் நாளை இத்தனை படம் ரிலீஸா?-what are the tamil movies releasing in theatre in this week on august 23 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Theatre Release: வரிசைக்கட்டி நிற்கும் படங்கள்.. கோலிவுட்டில் நாளை இத்தனை படம் ரிலீஸா?

THEATRE RELEASE: வரிசைக்கட்டி நிற்கும் படங்கள்.. கோலிவுட்டில் நாளை இத்தனை படம் ரிலீஸா?

Aarthi Balaji HT Tamil
Aug 22, 2024 04:45 PM IST

THEATRE RELEASE: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

THEATRE RELEASE: வரிசைக்கட்டி நிற்கும் படங்கள்.. கோலிவுட்டில் நாளை இத்தனை படம் ரிலீஸா?
THEATRE RELEASE: வரிசைக்கட்டி நிற்கும் படங்கள்.. கோலிவுட்டில் நாளை இத்தனை படம் ரிலீஸா?

இப்படத்தை தமிழின் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், தனது எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். கொட்டுக்காளி திரைப்படமானது வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

வாழை

மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கித்தில் உருவாகி இருக்கும், திரைப்படம் ’ வாழை ’. இந்த படத்தை மாரி செல்வராஜின் மனைவி திவ்யா தான் தயாரித்து உள்ளார்.

’ வாழை ’படத்தில் திவ்யா துரைசாமி, நிகிலா விமல், கலையரசன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். வாழை திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

சர்வதேச திரைப்பட விழா

ரிலீஸுக்கு முன்பே கொட்டுக்காளி திரைப்படம், பெர்லின் உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றது . இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

போகும் இடம் வெகுதூரமில்லை

மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'போகும் இடம் வெகுதூரமில்லை' படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங் உள்ளிட்டோர் நடித்து இருக்கிறார்கள்.

விமல் ஆம்புலன்ஸ் டிரைவர் கதாபாத்திரத்திலும், தெருக்கூத்து கலைஞராக கருணாஸூம் நடித்து இருக்கிறார்கள். இப்படம், ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சாலா

அறிமுக இயக்குநர் எஸ்.டி.மணிபால் இயக்கத்தில் உருவாகி உள்ள படம், ‘ சாலா '. இதில், தீரன்,ஸ்ரீ நாத், ரேஷ்மா வெங்கடேஷ், அருள்தாஸ், சம்பத்ராம், 'மெட்ராஸ்' வினோத் என பலர் நடித்து உள்ளனர்.

பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரித்து உள்ளார். விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பு செய்து உள்ளார். ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு தீசன் இசை அமைத்து உள்ளார். சாலா படம், ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதர்மக் கதைகள்

ஜி.வி. படத்தின் நாயகன் வெற்றி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் அதர்மக் கதைகள். இப்படத்தை காமராஜ் வேல் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரெஹானா, அருணகிரி, ஹரிஷ் அர்ஜுன் மற்றும் சரண் குமார் ஆகியோர் இசையமைத்து உள்ளனர். அதர்மக் கதைகள் படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.