OTT Release: தரமான 6 படங்கள் ரிலீஸ்.. இந்த வார ஓடிடியில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய லிஸ்ட்-what are the movies to be release in ott platforms on this weekend - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ott Release: தரமான 6 படங்கள் ரிலீஸ்.. இந்த வார ஓடிடியில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய லிஸ்ட்

OTT Release: தரமான 6 படங்கள் ரிலீஸ்.. இந்த வார ஓடிடியில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய லிஸ்ட்

Aarthi Balaji HT Tamil
Sep 26, 2024 07:50 AM IST

OTT Release: இந்த முறை ஓடிடியில் வெவ்வேறு வகை திரைப்படங்கள் நுழையவுள்ளன. மொத்தமாக ஆறு படங்கள் ரிலீஸாக உள்ளது.

OTT Release: தரமான 6 படங்கள் ரிலீஸ்.. இந்த வார ஓடிடியில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய லிஸ்ட்
OTT Release: தரமான 6 படங்கள் ரிலீஸ்.. இந்த வார ஓடிடியில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய லிஸ்ட்

இப்போது இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. வியாழன் (செப்டம்பர் 26) அன்று சாட்டர்டே திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிஜிட்டல் முறையில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

வாழை

கோலிவுட்டில் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்த வாழை திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

மாமன்னன் படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இந்தப் படத்தை இயக்கினார். வாழை திரைப்படம் ஆகஸ்ட் 23 அன்று திரையரங்குகளில் வெளியானது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வாழை படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவயதில் தான் சந்தித்த அனுபவங்களின் தொகுப்பை கதையாக மாற்றி, இந்தப்படத்தில் அவர் காட்சிகளாக வைத்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இந்தப்படம், தற்போது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தாஜா கபார் சீசன் 2

'தாஜா கபார் 2' என்ற வலைத் தொடர் எதிர்காலத்தை கணிக்கும் ஒருவரைச் சுற்றி வருகிறது. இந்தத் தொடரில் புவன் பாம், ஷ்ரியா பில்கோன்கர், ஜே.டி. சக்ரவர்த்தி, தேவன் போஜானி, பிரதம் பரப், நித்யா மாத்தூர் மற்றும் ஷில்பா சுக்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். கபார் 2 இன் சமீபத்திய சீசன் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியிடப்படும்.

லவ் சிதாரா

சோபிதா துலிபாலா நடித்த 'லவ் சிதாரா' படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப் போகிறது. இந்த வெள்ளிக்கிழமை அதாவது செப்டம்பர் 27, ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். இந்த காதல் நாடக படத்தை வந்தனா கட்டாரியா இயக்கியுள்ளார். ராஜீவ் சித்தார்த் முக்கிய வேடத்தில் நடித்தார்.

டிமான்டி காலனி 2

அஜய் ஞானமுத்து இயக்கிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமானுஷ்ய திகில் படம், டிமாண்டி காலனி 2. 2015 ஆம் ஆண்டு வெளியான படத்தின் தொடர்ச்சியாக வெளியானது. அருள்நிதி மீண்டும் சீனிவாசனாக நடித்தார் இதில் பிரியா பவானி சங்கர் மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரன் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஆகஸ்ட் 15, 2024 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்போது செப்டம்பர் 27, 2024 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தி கிரேட் இந்தியன் கபில் ஷோ சீசன் 2

தி கிரேட் இந்தியா கபில் ஷோவின் இரண்டாவது சீசன் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் தொடங்கி உள்ளது. நிகழ்ச்சியின் முதல் எபிசோட் ஒளிபரப்பப்பட்டது, அதில் அலியா பட் 'ஜிக்ரா' படத்தை விளம்பரப்படுத்த தோன்றினார். இதன் இரண்டாம் பாகம் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகிறது. இரண்டாவது எபிசோடில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைஃப் அலிகான் ஆகியோர் விருந்தினர்களாக தோன்றுவார்கள். இந்த நட்சத்திரங்கள் தங்கள் படமான தியோராவை விளம்பரப்படுத்த வருகிறார்கள். தியோரா: பார்ட் 1 செப்டம்பர் 27 அன்று திரையரங்குகளில் வரவுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.