OTT Release This Week: என்ன ஒரே சூப்பர் படங்களா இருக்கே? - இந்த வாரம் ஓடிடியில் என்ன ஸ்பெஷல் பாருங்க!
OTT Release This Week: இந்த வாரம் ரசிகர்கள் எதிர்பார்த்த பல படங்கள் ஓடிடியில் ரிலீஸாக தயாராக உள்ளது. அதன் விவரம் பற்றி பார்க்கலாம்.

தங்கலான்
சார்பட்டா பரம்பரைக்குப் பின், பா.இரஞ்சித் கடைசியாக இயக்கிய படம், நட்சத்திரம் நகர்கிறது. அதனைத் தொடர்ந்து, அவர் இயக்கிய படம் தான், தங்கலான். இப்படத்தில் நடிகர் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் ஷீட்டிங், ஒகேனக்கல், மதுரை, ஆந்திராவின் கடப்பா போன்றப் பல்வேறு பகுதிகளில் நடந்தது.
கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இந்த திரைப்படம் கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் யதார்த்த வாழ்வியலையும், ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு உரிமைகளுக்காக போராடிய அவர்களின் போராட்ட வாழ்வியலை மாய யதார்த்தம் மற்றும் புதுமையான திரை மொழியால் உருவாக்கப்பட்டு இருந்தது.
இதில் சீயான் விக்ரமின் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பை கண்களை இமைக்க மறந்து, அகல விரித்து.. கண்டு ரசித்து, வியந்து பாராட்டாதவர்களே இல்லை எனலாம். இது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் புதிய அனுபவத்தை அளித்தது. 'தங்கலான்' படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
