“ஆசை இல்ல அண்ணாச்சி.. பசி..” ‘தமிழன்’ முதல் ‘போக்கிரி’ வரை.. அரசியல் ஆற்றங்கரையைச் சேர விஜய் தரித்த அவதாரங்கள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “ஆசை இல்ல அண்ணாச்சி.. பசி..” ‘தமிழன்’ முதல் ‘போக்கிரி’ வரை.. அரசியல் ஆற்றங்கரையைச் சேர விஜய் தரித்த அவதாரங்கள்!

“ஆசை இல்ல அண்ணாச்சி.. பசி..” ‘தமிழன்’ முதல் ‘போக்கிரி’ வரை.. அரசியல் ஆற்றங்கரையைச் சேர விஜய் தரித்த அவதாரங்கள்!

Kalyani Pandiyan S HT Tamil
Oct 28, 2024 07:00 AM IST

“ஆசை இல்ல அண்ணாச்சி.. பசி..”- அரசியல் ஆற்றங்கரையைச்சேர விஜய் தரித்த அவதாரங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

“ஆசை இல்ல அண்ணாச்சி.. பசி..”  ‘தமிழன்’ முதல்  ‘போக்கிரி’ வரை.. அரசியல் ஆற்றங்கரையைச் சேர விஜய் தரித்த அவதாரங்கள்!
“ஆசை இல்ல அண்ணாச்சி.. பசி..” ‘தமிழன்’ முதல் ‘போக்கிரி’ வரை.. அரசியல் ஆற்றங்கரையைச் சேர விஜய் தரித்த அவதாரங்கள்!

இந்த முடிவை அவர் நீண்ட வருடங்களுக்கு முன்பாகவே எடுத்து விட்டார். ஆனால், காலம் இப்போதுதான் அவரை கரை வந்து சேர்த்து இருக்கிறது. இந்தக்கரையை வந்து சேர்வதற்கு அவர் பயன்படுத்திய படகுதான் சினிமா. ஆம், சினிமாவில் தனக்கான அரசியல் வருகையை தன்னுடைய படங்களின் வாயிலாக அரைக்கூவல் விடுத்துக்கொண்டே இருந்த விஜய், அதை எவ்வாறு சாத்தியப்படுத்தினார்.. அவர் படங்களில் பேசிய அரசியல் என்ன உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.

தமிழன்

’சூர்யா’ என்ற பெயர் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்த விஜய், அன்றாட வாழ்வில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்காக கோர்ட்டில் வாதாடும் திரைக்காட்சிகள் இன்றளவும் நினைவில் உள்ளவை. இந்தியாவின் கடனை அடைக்க விஜய் ஆலோசனை தருவதுபோலவும், மக்களுக்கு சட்ட அறிவை ஊட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

தமிழன் படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படங்களில் மட்டுமே நடிக்கத் தொடங்கிய விஜயின் படங்கள் வசூலிலும் சாதனை படைத்து ரஜினிக்கு அடுத்த வசூல் நாயகனாக உயர்த்தியது. அடுத்தடுத்து வந்த பகவதி, மதுர உள்ளிட்ட படங்கள் மக்கள் பிரச்னைக்காக போராடும் நாயகனாக விஜயை வடிவமைத்தது.

போக்கிரி

2007ஆம் ஆண்டு வெளியான போக்கிரி படத்தில் இடம் பெற்ற ‘ஆடுங்கடா என்ன சுத்தி’ பாடலில் ‘தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து இதுதான் என் கருத்து’ என்ற வரிகள் தீண்டாமை குறித்தும் நாட்டில் நிலவும் சாதியம் குறித்தான விஜய்யின் பார்வையை காட்டுவதாய் அமைந்தது.

வில்லு

2008ஆம் ஆண்டில் ஈழப் போர் உச்சம் பெற்ற காலகட்டத்தில் நடிகர் சங்கம் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட விஜய் ‘போர் நிறுத்தம் கோரி ஒருகோடி தந்திகளை பிரதமருக்கு அனுப்ப வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதுடன் விஜய் நற்பணி இயக்கம் சார்பில் 37 இடங்களில் அவரது ரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

2009ஆம் வெளியான ’வில்லு’ படத்தில் வெளிவந்த ’ராமா... ராமா என்ற பாடலில்’ ‘அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்’ என பாடல் இலங்கை தமிழர் பிரச்னையில் தனி ஈழம் ஒன்றே நிரந்தர தீர்வு என்பதே விஜயில் நிலைப்பாடு என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது.

சுறா

2010ஆம் ஆண்டு வெளியான ’சுறா’ படத்தில் டீக்கடைக்கு டீக்குடிக்க வரும் விஜயிடம் என்ன சுறா இன்னைக்கு கடலுக்கு போகலயா என கடைக்காரர் கேட்க; ‘இல்லணே ராமேஸ்வரத்துல எங்க மீனவர்களை சுட்டுக் கொன்னுட்டாங்களாம், அதனால் இன்னைக்கு கடலுக்கு செல்லவில்லை’ என மீனவர்கள் பிரச்னையை தனது படத்தில் அழுத்தமாக பதிவு செய்திருப்பார். மேலும் மீனவர்கள் கடலை விட்டு வெளியேற்ற செய்யப்படும் அரசியலையும் சுறா பேசி இருந்தது.

தலைவா

விஜய் பேசும் அரசியல் வசனங்களின் உச்சமாக 2013ஆம் ஆண்டு வெளியான ‘தலைவா’ திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த 'Time to Lead’ என்ற வாசகம் அப்போதய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை கோபப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக அப்படம் தமிழ்நாட்டை தவிர மற்ற எல்லா இடங்களிலும் வெளியானது. ஜெயலலிதாவை சந்திக்க தனது தந்தை உடன் கொடநாட்டுக்கு சென்ற விஜய், அவரை சந்திக்க முடியாமலேயே சென்னை திரும்பியதாக செய்திகள் வெளியாகின.

கத்தி

2014ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் தண்ணீர் அரசியலை பேசியது.இட்லியை வைத்து கம்யூனிசத்தை கூறும் விஜயின் வசனமும் அரசியல் அனலை கக்கியது. இதன் உச்சமாக இடம்பெற்ற க்ளைமாக்ஸ் காட்சியில் ’சாதாரண தண்ணீ இதுலயா இவ்வுளோ பணம் கெடச்சிடும்’ என கேள்வி எழுப்பும் டிவி ரிப்போர்ட்டருக்கு ’யோவ்...! சாதாரண தண்ணீயா....! 2ஜினா என்னையா... அலைக்கற்றை, வெறும் காத்தை மட்டுமே வச்சு கோடி கோடியா ஊழல் பன்ற ஊருயா இது’ என்ற வசனம் திமுகவினரை சூடாக்குவதாய் அமைந்தது.

மெர்சல்

2017ஆம் ஆண்டு வெளியான ‘பைரவா’ படம் மருத்துவக்கல்வி அரசியலை பேசிய நிலையில் அடுத்து வெளியான மெர்சல் படம் பாஜகவினரை மெர்சல் ஆக செய்தது. ஜிஎஸ்டி வரி குறித்து விஜய் பேசும் வசனம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாஜக மூத்த தலைவராஜ ஹெச்.ராஜா தனது பேட்டிகளில் ‘ஜோசப் விஜய்’ என்று அவரது மதத்தை குறிப்பிட்டு பேசியது பேசுபொருளானது.

சர்க்கார்

தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தும் பெயரை கொண்டு 2018ஆம் ஆண்டு வெளியான ’சர்க்கார்’ திரைப்படம் தமிழ்நாட்டில் நிலவும் இலவசங்கள் குறித்த அரசியலை பேசியது. தமிழ்நாட்டிற்கு இலவசங்கள் வேண்டுமா? வேண்டாமா? என்ற அரசியல் விவாதத்தை கிளப்பியது.

மாஸ்டர்

போதைப்பொருளுக்கு எதிரான கருத்தையும், அதில் இருக்கும் அரசியலையும் அந்தப்படத்தில் பேசினார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.