தொகுப்பாளினி பிரியங்கா ஒரு எபிசோட்டிற்கு வாங்கும் சம்பளம் என்ன?
பிரியங்கா ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்க வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது .
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா . தனது கலகலப்பான பேச்சு , அதிரடியான சிரிப்பால் மக்களை மகிழ்வித்து வருகிறார் . ' சூப்பர் சிங்கர் ' , ' ஜோடி நம்பர் 1 ' உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவருக்கு தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .
இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் ஐந்தாவதது சீசனில் , 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் . அதில் ராஜூ முதல் இடத்தை பிடிக்க பிரியங்கா இரண்டாவது இடத்தை தட்டிச் சென்றார் .
பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா நடந்து கொண்ட விதம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் , அதை எல்லாம் மறக்கும் அளவில் அன்பை பெற்று 2 ஆவது இடத்தை வென்றார் .
இவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது மட்டுமின்றி சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் . இவர் தன் பெயரில் யூ- டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் . அதில் தினமும் தான் செய்யும் வேலை , வெளியே செல்லும் போது நடக்கும் நிகழ்வுகள் , ஷாப்பிங் செய்வது உள்ளிட்ட எல்லவற்றையும் Vlogகாக எடுத்து பதிவு செய்து வருகிறார் .
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவ் அப்போது நடிகர் , நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகிறது . அந்த வகையில் , தொகுப்பாளினி பிரியங்கா ஒரு எபிசோட்டை தொகுத்து வழங்குவதற்கு 2 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது .
இருப்பினும் இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை என்பதால் இது , உண்மையா ? பொய்யா ? என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர் . இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் , ” என்னது ஒரு எபிசோட்டிற்கு 2 லட்சம் ரூபாயா ? ” என வாய்ப்பிளந்து இருக்கின்றனர் .
டாபிக்ஸ்