Sourav Ganguly: டெஸ்ட் கேப்டன்சி விலகல்! கோலி தான் வாய் திறக்க வேண்டும் - கங்குலி பளிச்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Sourav Ganguly: டெஸ்ட் கேப்டன்சி விலகல்! கோலி தான் வாய் திறக்க வேண்டும் - கங்குலி பளிச்

Sourav Ganguly: டெஸ்ட் கேப்டன்சி விலகல்! கோலி தான் வாய் திறக்க வேண்டும் - கங்குலி பளிச்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 14, 2023 11:58 AM IST

டெஸ்ட் கேப்டன்சி பதவியிலிருந்து விராட் கோலியை நீக்க பிசிசிஐ தயாராக இல்லை. அது அவரது தனிப்பட்ட முடிவு. அதை பற்றி அவர்தான் வெளிப்படையாக பேச வேண்டும் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின்போது செளரவ் கங்குலி - விராட் கோலி
ஐபிஎல் தொடரின்போது செளரவ் கங்குலி - விராட் கோலி (PTI)

இதுபற்றி பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கங்குலி கூறியதாவது:

கோலி டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து வெளியேறுவதற்காக பிசிசிஐ எதுவும் செய்யவில்லை. அது எதிர்பாராமல் நிகழ்ந்தது. தென்ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் முடிந்தவுடன் நடந்துள்ளது. கேப்டன்சியிலிருந்து விலகியது ஏன் என்பதை கோலி தான் வெளிப்படையாக பேச வேண்டும்.

இப்போது நான் அதை பற்றி பேசுவதில் எந்த பயணும் இல்லை. ஏனென்றால் கோலி தற்போது டெஸ்ட் அணி கேப்டனாக இல்லை. அந்த நேரத்தில் இந்திய அணி தேர்வாளர்கள் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டும். அப்போது ரோஹித் ஷர்மா சிறந்த ஆப்ஷனாக இருந்தார். 

இவ்வாறு அவர் கூறினார்.

உலக அளவில் சிறந்த டெஸ்ட் கேப்டன்களில் நான்காவது வெற்றிகரமான கேப்டனாக ஜொலித்தவர் கோலி. இந்தியாவுக்காக 68 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பேற்ற கோலி, 40 வெற்றி, 11 டிரா, 17 தோல்விகளை பெற்றுள்ளார்.

சிறந்த டெஸ்ட் கேப்டன்களின் வரிசையில் தென்ஆப்பரிக்காவின் கிரீம் ஸ்மித், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் ஆகியோருக்கு அடுத்தபடியாக உள்ளார்.

விராட் கோலி கேப்டன்சியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றது.

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை டிரா செய்ததுடன், நியூசிலாந்து, தென்ஆப்பரிக்கா உள்ளிட்ட அந்நிய மண்ணிலும் வெற்றிகளை குவித்தது.

டெஸ்டை போல் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடி தந்தார் கோலி. கேப்டனாக இருந்தாலும் தனது பேட்டிங் பார்மையும் இழக்காமல் தக்க வைத்து கொண்டு ரன் மெஷினாகவே தொடர்ந்து செயல்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.