டிக் டிக் டிக்… விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  டிக் டிக் டிக்… விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு?

டிக் டிக் டிக்… விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு?

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 12, 2022 04:26 PM IST

விக்ரம் திரைப்படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி வரும் திங்கள் அன்று (மார்ச் 14) காலை 7 மணிக்கு அறிவிக்கப்படும் என அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

<p>விக்ரம் படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி?</p>
<p>விக்ரம் படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி?</p>

இந்தப் படத்தின் பாடல்கள் ஒலிக்காத இடமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இசையமைப்பாளர் அனிருத் விளையாடியிருப்பார். தற்போது இந்தக் கூட்டணி, ஒரு மெகா ஸ்டார்ஸ் பட்டாளத்துடன் இணைந்துள்ளது.

<p>விக்ரம் படத்தின் போஸ்டர்</p>
விக்ரம் படத்தின் போஸ்டர்

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். மேலும் கமல்ஹாசனுக்கு மகனாக நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் ஷிவானி நாராயணனும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். இத்திரைபடத்தினை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இதனுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளன்று இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

கொரோனா தொற்று கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், சில மாதங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கப்பட்டன. தொடர்ந்து காரைக்குடியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தன. பின்னர் இந்த படத்தின் இரண்டாவது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோயம்புத்தூர், பாண்டிச்சேரியில் நடந்தன. இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றன.

 

இதனை சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக கமல்ஹாசனுடன் தான் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து அறிவித்து இருந்தார். அதேபோல், விக்ரம் திரைப்படம் இந்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் டதொடங்கிய இறுதிக்கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் 2ஆம் தேதியன்று நிறைவடைந்தது.

இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி வரும் திங்கள் அன்று (மார்ச் 14) காலை 7 மணிக்கு அறிவிக்கப்படும் எனக் கூறி, விக்ரம் திரைப்படத்தின் புதிய போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படமானது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நாடு முழுவதும் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

Whats_app_banner

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.