RIP Captain Vijayakanth: ராதிகா - விஜயகாந்த் காதல்.. சகுனி வேலை பார்த்து பிரித்த நண்பர்!
Summary Prefix: RIP Captain: மறைந்த ராசிகா மற்றும் விஜயகாந்த் காதலை நண்பர் ஒருவர் பிரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
Captain Vijayakanth Passed Away: இனிக்கும் இளமை படத்தில் முதன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், விஜயகாந்த். பின்னர் ஹீரோவாக வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடித்தார்.
அந்த காலத்தில் இவருக்கு ஆஸ்தான நடிகை என்றாலே பலரும் ராதிகாவை தான் சொல்வார்கள். விஜயகாந்த் மற்றும் ராதிகா ஜோடியாக ஒரு படத்தில் சேர்ந்து நடித்தாலே நிச்சயமாக வெற்றிப் படமாக தான் இருக்கும் என அடித்து சொல்லிவிடலாம்.
இவர்களின் உறவு நட்பை தாண்டி காதாக மாறி திருமணம் வரை சென்று இருக்கிறது. சொல்லப்போனால் திருமணத்திற்கு புடவை முதற்கொண்டு ராதிகா எடுத்து வைத்து இருந்து இருக்கிறார். ஆனால் திடீரென அந்த திருமணம் நடக்காமல் போனது.
இந்த சம்பவம் தொடர்பாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு அளித்த பேட்டியில், "விஜயகாந்த் சமந்தமாக நிறைய இருக்கிறது. ஆனால் அவர் கிசுகிசுகளை கண்டு கொள்வது இல்லை. விஜயகாந்த் மற்றும் ராதிகாவை பிரித்தது இப்ராஹிம் ராவுத்தர் தான் காரணம்.
வேண்டாம் என சொல்லிவிட்டார். இருவரும் விரும்பியது அனைவருக்கும் தெரியும். இருவரும் சினிமாவில் இருப்பதால் வேண்டாம் என நினைத்துவிட்டார். ராவுத்தருக்கு, விஜயகாந்தை முதலமைச்சராக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ராவுத்தர் தான் விஜயகாந்தை வடிவமைத்தார்.
ராதிகா வந்தால் அனைத்தும் மாறிவிடும் என நினைத்து வேண்டாம் என சொல்லி இருக்கிறார். இதனால் ராதிகா மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளானார்ஆனால் பிரமேலாதா வந்தவுடன், ராவுத்தரையே தூக்கி வெளியே அனுப்பிவிட்டார் ” என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்