நவராத்திரி கொண்டாட்டம்; உங்கள் ஊருக்கு வரும் விஜய் டிவி! - குவியும் சீரியல் பிரபலங்கள்; அனுமதி இலவசம்! - முழு விபரம்!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பிரபலங்கள் சிலர், நிகழ்ச்சியில் மெய்சிலிர்க்க வைக்கும் இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர். - விஜய் டிவியின் நவராத்திரி கொண்டாட்டம்!

நவராத்திரி கொண்டாட்டம்; உங்கள் ஊருக்கு வரும் விஜய் டிவி! - குவியும் சீரியல் பிரபலங்கள்; அனுமதி இலவசம்! - முழு விபரம்!
விஜய் டிவி, தன்னுடைய பிரபலமான பண்டிகை நிகழ்வான ‘நவராத்திரி கொண்டாட்டம் 2024’ நிகழ்ச்சியை மீண்டும் கொண்டாடத் தயாராகி விட்டது. இந்த ஆண்டு நவராத்திரியின் அதி பெரிய மற்றும் சிறப்பு கொண்டாட்டமாக இருக்கப்போகும் இந்த நிகழ்ச்சி, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 4 முதல் 10 வரை தமிழகமெங்கும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவுள்ளது.
கடந்த வருடம் நடந்த ‘நவராத்திரி கொண்டாட்டம்’ நிகழ்வு மிகப்பெரிய வெற்றியடைந்தது மற்றும் மாடிஸ், e4m, மற்றும் ப்ரோமாக்ஸ் விருதுகளை வென்றது. இந்த ஆண்டும் கடந்தவற்றை மீறி அதிக ஆவலோடு அனைவரும் எதிர்பார்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.