வசூல் வேட்டையில் வேட்டையன்! 4 ஆவது நாள் வசூலே இவ்வளவா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வசூல் வேட்டையில் வேட்டையன்! 4 ஆவது நாள் வசூலே இவ்வளவா!

வசூல் வேட்டையில் வேட்டையன்! 4 ஆவது நாள் வசூலே இவ்வளவா!

Suguna Devi P HT Tamil
Oct 14, 2024 08:26 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10 அன்று வெளியான வேட்டையன் திரைப்படத்தின் நான்காவது நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் வேட்டையில் வேட்டையன்! 4 ஆவது நாள் வசூலே இவ்வளவா!
வசூல் வேட்டையில் வேட்டையன்! 4 ஆவது நாள் வசூலே இவ்வளவா!

ரஜினியின் 'வேட்டையன்' அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையை ஒட்டி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. வேட்டையன் வெளியான முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை தொடங்கி உள்ளது. பின்னர் அக்டோபர் 11 அன்று இரண்டாவது நாளில் சரிவைக் கண்டது. இப்படம் சனிக்கிழமையில் மட்டும் உலகம் முழுவதும் ரூ 35 கோடியை வசூலித்தது. மேலும் ஞாயிற்றுக் கிழமையான நேற்று மட்டும் 22. 25 கோடி வசூலித்துள்ளது. 

Sacnilk.com படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படம் ரிலீஸ் ஆன வியாழக்கிழமை பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படம் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் முதல் நாளில் சுமார் 25.27 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்கு ஆக்கிரமிப்புக்கு வரும்போது, ​​தமிழில் 53.96% ஆகவும், தெலுங்கில் 34.15%, இந்தியில் 8.11% மற்றும் கன்னடத்தில் துறையில் 10.79% என இருந்துள்ளது.

ஒட்டுமொத்த வசூல் 

வேட்டையன் படம் வெளியான முதல் நாளில் விஜயின் தி கோட் படத்தை விட குறைவான வசூலே பெற்றிருந்தது.  விஜய் நடித்துல்ல தி கோட் படம் முதல் நாளில் ரூ. 25.55 கோடி வசூலித்து இருந்தது. அத்துடன் வழக்கமான ரஜினி படத்துக்கான ஓபனிங் வேட்டையன் படத்துக்கு இல்லை எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் பேமிலி ஆடியன்ஸ் வருகையும் இருந்த காரணத்தால் கடந்த நாட்களை விட விடுமுறை நாளான நேற்று வசூல் சற்று அதிகரிக்க ஆரம்பித்து உள்ளது. இது வரை ஓட்டு மொத்தமாக 104 கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வசூல் வேட்டை நடத்துமா?

இந்நிலையில் படம் நான்காவது நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. அதேபோல் முதல் நாளில் படம் ரூபாய் 35 கோடிகள் வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் ஜீவா நடித்துள்ள பிளாக் படம் கடந்த 2 நாட்களாக நல்ல வசூல் அளித்து வருகிறது. இதன் காரணாமாக வேட்டையன் வசூல் குறையவும் வாய்ப்பு உள்ளது.  

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.