கடவுள் இல்லனு சொல்றான் பாரு அவன கூட நம்பு! கிரேசி மோகன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கடவுள் இல்லனு சொல்றான் பாரு அவன கூட நம்பு! கிரேசி மோகன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

கடவுள் இல்லனு சொல்றான் பாரு அவன கூட நம்பு! கிரேசி மோகன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

Suguna Devi P HT Tamil
Oct 16, 2024 06:48 AM IST

பொறியியல் பட்டதாரியான கிரேசி மோகன், நாடகம் மீதான ஆர்வத்தால் அதில் இணைந்தார். பின்னாளில் வசன எழுத்தாளராகவும், நாடக அமைப்பாளராகவும் மாறினார்.

கடவுள் இல்லனு சொல்றான் பாரு அவன கூட நம்பு! கிரேசி மோகன் பிறந்தநாள்!
கடவுள் இல்லனு சொல்றான் பாரு அவன கூட நம்பு! கிரேசி மோகன் பிறந்தநாள்!

நாடக கலைஞர் 

பொறியியல் பட்டதாரியான கிரேசி மோகன், நாடகம் மீதான ஆர்வத்தால் அதில் இணைந்தார். பின்னாளில் வசன எழுத்தாளராகவும், நாடக அமைப்பாளராகவும் மாறினார். நடிகர் எஸ். வி. சேகரின் கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம் என்ற நாடகத்தில் முதன் முதலில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் கிரேசி மோகன் என அழைக்கப்பட்டார். 

மேலும் இவரது வசனங்களை பார்த்த நடிகர் கமல் ஹாசன் தமிழ் திரை உலகிற்கு வசன எழுத்தாளராக அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து கிரேசி மோகன் பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார். 

கமல் - மோகன் கூட்டணி 

நடிகர் கமல் ஹாசன் மற்றும் கிரேசி மோகனின் கூட்டணியில் வந்த அனைத்து படங்களும் பெரும் வெற்றி பெற்றது. அப்படங்களின் வசங்கங்கள் இன்றளவும் பலருக்கு மனதில் பதிந்து போயிருக்கலாம். கமலுக்கு முதன் முதலாக வசனம் எழுதிய அபூர்வ சகோதரர்கள் தொடங்கி வசூல் ராஜா MBBS வரை அனைத்து படங்களின் வசனங்களும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதே சமயத்தில் சரியான நெத்தியடி வசனங்களால் சிந்திக்கவும் வைக்கும் திறமை இவரது வசனத்தில் இருந்தது.   

“பீம் பாய், பீம் பாய்” என மைக்கேல் மதன் காம ராஜாவில் வரும் வசனம் இன்று வரை ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது. மேலும் வசூல் ராஜா MBBS படத்தில் வரும் அனைத்து வசனங்களும் பல 90 ஸ் கிட்ஸ்களுக்கு இன்று வரை நினைவில் இருக்கும். “கடவுள் இருக்குன்னு சொல்றான் பாரு அவன நம்பு, கடவுள் இல்லனு சொல்றான் பாரு அவன கூட நம்பு! ஆனா கடவுளே நான் தான் சொல்றான் பாரு அவன மட்டும் நம்பாத, பூட்ட கேஷ் ஆகிடுவா” என்ற வசனமே கிரேசி மோகனின் வசன நேர்த்திக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. கமலுடன் இணைந்து அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜா, சதிலீலாவதி, அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா MBBS என பல படங்களில் பணியாற்றியுள்ளனர். 

கிரேசி மோகன் படங்கள் மற்றும் நாடகங்களில் பணியாற்றி வந்த போது, ரசிகர்களிடம் நேரடியாக ஊடகங்கள் வாயிலாக உரையாடி வந்தார். நாளிதழ்களில் “கிரேஸியிடம் கேளுங்கள்” என்ற ஒரு பகுதி வாயிலாக நேரடியாக ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்தார். அதில் அவர் 1952 ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று பிறந்தார். அன்று அந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அந்த தீபாவளி தான் தனக்கு மிகவும் பிடித்த தீபாவலில் எனவும் தெரிவித்து உள்ளார். 

ஜானகி 

கிரேசி மோகன் தான் பணியாற்றிய படங்கள் எல்லாவற்றிலும் கதாநாயகியின் பெயரை ஜானகி என வைக்க வேண்டும் என கேட்டு ஒப்புக்கொண்ட பின்பு தான் வசனம் எழுதுவாராம். அதற்கு காரணம் அவரது நாடக  குருவின் பெயர் ஜானகி என்பதாலும், அவருக்கு அளிக்கும் மரியாதையாக இதனை செய்வதாகவும் குறிப்பிடுகிறார். 2019 இல் மறைந்த பின்னும் இன்றும் ரசிகர் மனதில் மோகன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மோகனின் 72 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.