Vanitha Vijayakumar: ‘என்ன தாக்கியவர்களுக்கு செருப்படி’... கற்பழிப்பு, கொலை மிரட்டல் வருது..’ - வனிதா விளாசல்!
Vanitha Vijayakumar: ‘என்ன தாக்கியவர்களுக்கு செருப்படி’... கற்பழிப்பு, கொலை மிரட்டல் வருது..’ - வனி
அண்மையில் வனிதா விஜயகுமாரை மர்மநபர் ஒருவர் தாக்கினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தாக்குதல் பற்றி பேசிய வனிதா, இரவில் தாக்கிய நபரின் அடையாளம் தெரியவில்லை என்றும் அவர் ரெட் கார்டா கொடுக்கிறீங்க என்று கூறி தாக்கியதாகவும் கூறினார். இதனையடுத்து பிரதீப்பின் ஆதரவாளர் யாரோ ஒருவர்தான் தாக்கியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து இந்தியா கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு வனிதா பேசினார்.
அவர் பேசும் போது, “தெலுங்கில் பல்லவி பிரஷாந்த் என்பவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வின்னராக மாறினார். ரன்னராக அமர்தீப் என்பவர் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் பல்லவி பிரசாத்தின் ரசிகர்கள் அமர்தீப் காரை அடித்து உடைத்தனர்.
அதை நான் பார்த்தேன். ஆனால் இதனை பற்றி பேசிய தமிழ் ரசிகர்கள், நல்ல வேளையாக எங்கள் ஊரில் இந்த மாதிரி எல்லாம் இல்லை என்று கமெண்டுகளை பதிவிட்டனர்.
அங்கு காரை தான் உடைத்தார்கள். இங்கு என்னுடைய முகத்தையே உடைத்து விட்டார்கள். இதை மட்டும் நம்ப மறுக்கிறார்கள்; காரணம் என்னவென்றால், இதை வனிதா சொல்கிறார்.
அவர்களை யாரப்பா அடிப்பார்? அவர் விழுந்திருப்பார் என்று கூறுகிறார்கள். நான் உண்மையிலேயே கீழே விழுந்தால் தலையில் அடிப்பட்டு கட்டு போட்டிருப்பார்கள்.
ஆனால் கண்ணில் இவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டிருக்காது.கிட்டத்தட்ட நான் தாக்கப்பட்டு ஒரு மாதம் ஆகப்போகிறது. இன்றும் நான் கண்ணாடி போட்டு தான் சுற்றிக் கொண்டிருக்கிறேன். புது வருடத்தில் எல்லாம் சரியாகி விட்டு, நான் பழைய வனிதாவாக மீண்டும் வருவேன்.
என்னை தாக்கியவர்களுக்கு நான் கொடுத்த செருப்படி இந்த ஒரு மாதம் நான் தொடர்ச்சியாக பிக் பாஸ் குறித்து விமர்சனம் செய்தது, வெளியே பயணம் செய்தது உள்ளிட்டவை ஆகும்.
என்னை எதுவும் தடுக்க முடியாது என்று சொல்வதற்காகவே நான் இப்படி செய்கிறேன். நான் எங்கேயும் சோர்ந்து படுக்கவில்லை; படுக்கவும் மாட்டேன். என்னை யாராலும் உடைக்க முடியாது. தெலுங்கில் உள்ளது போலே அதே அளவுக்கான வன்மம் நம் ஊரிலும் இருக்கிறது. இப்போது இருக்கக்கூடிய போட்டியாளர்களுக்கு சோசியல் மீடியாவில் இருந்து கற்பழிப்பு குறித்தான மிரட்டல்கள், கொலை மிரட்டல்கள் உள்ளிட்டவை வந்து கொண்டே இருக்கின்றன” என்று பேசினார்.
டாபிக்ஸ்