Vanitha Vijayakumar: சரியான ஓட்ட வாயா… நான் மட்டும் உள்ள போனா.. அர்ச்சனா அப்பாவை வெளுத்த வனிதா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vanitha Vijayakumar: சரியான ஓட்ட வாயா… நான் மட்டும் உள்ள போனா.. அர்ச்சனா அப்பாவை வெளுத்த வனிதா!

Vanitha Vijayakumar: சரியான ஓட்ட வாயா… நான் மட்டும் உள்ள போனா.. அர்ச்சனா அப்பாவை வெளுத்த வனிதா!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 20, 2023 07:53 AM IST

பின்னால் நடந்ததை அர்ச்சனாவிடம் சொல்வது அவர்கள் வேலை கிடையாது. அவர்களின் பெண்ணைதான் அவர்கள் பார்க்கச் சென்று இருக்கிறார்கள்.

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்

உள்ளே வந்த அர்ச்சனா அப்பா, முதற்கட்டமாக விசித்ராவிற்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, விசித்ராவிற்கும் அர்ச்சனாவிற்கும் இடையே பிரச்சினை வந்த போது, விக்ரம் பின்னால் சிரித்ததை கண்டித்தார். அதனை தொடர்ந்து, நிக்சனிடம் சென்ற அர்ச்சனா அப்பா, அவர் அர்ச்சனாவிடம் நடந்து கொண்ட சில விஷயங்கள் வருத்தம் தந்ததாக பேசினார். இதனை போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜோவிகாவின் அம்மாவும், நடிகையுமான வனிதா விமர்சனம் செய்திருக்கிறார்.

 

இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு அவர் பேசும் போது, “அர்ச்சனா அப்பா பேசியது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது, வெளியில் நடந்ததை எப்படி ஒப்பித்தாலோ, அதே போல இவர்களும் ஒப்பித்தார்கள். உண்மையில் சொல்லப்போனால், அர்ச்சனாவை விட இவர்கள் ஓட்ட வாயாக இருக்கிறார்கள்.

பின்னால் நடந்ததை அர்ச்சனாவிடம் சொல்வது அவர்கள் வேலை கிடையாது. அவர்களின் பெண்ணைதான் அவர்கள் பார்க்கச் சென்று இருக்கிறார்கள்.

அங்கே சென்ற பெண்ணுக்கு அவர்கள் அறிவுரை கூறலாம்; தவறு கிடையாது. நிச்சயம் அவர்கள் வந்தது அர்ச்சனாவிடம் மாற்றத்தை ஏற்படுத்தும். ஜோவிகா அத்தனை நாள் உள்ளே இருந்தார். ஒரு கட்டத்தில் அவளுக்கு, வனிதா என்ற மாத்திரை தேவைப்பட்டது.

நான் உள்ளே சென்று ஜோவிகா, ப்ளே யூயர் கேம் என்று சொல்லியிருந்தால் போதும், அவள் மீண்டும் ட்ராக்கிற்கு வந்திருப்பாள். அதைத்தான் ஒரு பெற்றோர் செய்ய வேண்டும். மாறாக சென்று மற்றவர்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டு இருக்கக்கூடாது!” என்று பேசினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.