Arrest: பிக் பாஸ் பிரபலத்துக்கு பாலியல் தொல்லை - இருவரை கைது செய்த போலீசார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Arrest: பிக் பாஸ் பிரபலத்துக்கு பாலியல் தொல்லை - இருவரை கைது செய்த போலீசார்

Arrest: பிக் பாஸ் பிரபலத்துக்கு பாலியல் தொல்லை - இருவரை கைது செய்த போலீசார்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 07, 2024 04:08 PM IST

கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் பாலியல் தொல்லை அளித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகையும், மாடலுமான ஷெரின் அளித்த புகாரில் போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷெரினா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷெரினா

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் ஷெரினாவின் ஓட்டுநர் கார்த்திக் தலைமறைவாகி இருந்து வந்த நிலையில், போலீசார் அவரை தேடி வந்தனர்.

இதைத்தொடர்ந்து கார் ஓட்டுநர் கார்த்திக், அவரது நண்பர் இளையராஜா ஆகி இருவரை போலீசார் மயிலாடுதுறையில் வைத்து கைது செய்தனர். பின் சென்னைக்கு அழைத்து வந்த அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், சில பிரச்னைகள் காரணமாக கார் ஓட்டுநர் கார்த்திக்கை, நடிகை ஷெரினா வேலையை விட்டு நீக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி, தனது கூட்டாளி இளையராஜாவுடன் இணைந்து நடிகைக்கு பாலியல் தொல்லை தர முயற்சித்ததோடு, போனில் கொலை மிரட்டல் விடுக்கவும் செய்துள்ளார் என தெரியலந்துள்ளது.

விசாரணைக்கு பின் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் போலீசார் சிறையில் அடைத்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.