Tovino Thomas: டோவினோ தாமஸின் அசத்தலான நடிப்பு.. ஏஆர்எம் ட்ரெயலர் எப்படி இருக்கு?
Tovino Thomas: மின்னல் முரளி படத்தின் மூலம் தமிழில் பிரபலமடைந்த டோவினோ தாமஸ் நடிக்கும் 50 ஆவது படமான ஏஆர்எம் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Tovino Thomas: "மின்னல் முரளி" மற்றும் "2018" ஆகிய படங்களின் மூலம் மலையாள சினிமா தாண்டி மற்ற மொழி ரசிகர்களிடமும் கவனத்தை ஈர்த்தார் டோவினோ தாமஸ்.
அவரின் அடுத்த படமான "ஏஆர்எம்" ஒரு பான்- இந்தியா ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகி உள்ளது. மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் பேனர்களின் கீழ் தயாராகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்கி உள்ளார். "ஏஆர்எம்" படம் முழுக்க முழுக்க 3D யில் தயாராகி, மலையாள சினிமா வரலாற்றில் தொழில்நுட்ப ரீதியாக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படமாக மாறி உள்ளது. இந்த படம் பற்றி அறிவிப்பு வெளியானதிலிருந்து, ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த படத்தில் இருந்து இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. தற்போது புதிதாக வெளியிடப்பட்ட டிரெய்லர் படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. இந்த ட்ரெய்லரில் பூமியை ஒரு எரியும் சிறுகோள் தாக்கி பெரிய வெடிப்பை ஏற்படுத்துகிறது.