Top 10 OTT Movies: ஒடிடியில் கெத்து காட்டும் தமிழ் படங்கள்! டாப் 10 வரிசை!-top tamil movies list in ott platform - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Ott Movies: ஒடிடியில் கெத்து காட்டும் தமிழ் படங்கள்! டாப் 10 வரிசை!

Top 10 OTT Movies: ஒடிடியில் கெத்து காட்டும் தமிழ் படங்கள்! டாப் 10 வரிசை!

Suguna Devi P HT Tamil
Sep 30, 2024 08:30 AM IST

Top 10 OTT Movies: கரோனா நோய் தொற்று காலத்தில் ஒடிடியில் பல படங்கள் ரிலீஸ் ஆகின. பின்னர் ஒடிடி மிகவும் பிரபலமாக தொடங்கியது.

Top 10 OTT Movies: ஒடிடியில் கெத்து காட்டும் தமிழ் படங்கள்! டாப் 10 வரிசை!
Top 10 OTT Movies: ஒடிடியில் கெத்து காட்டும் தமிழ் படங்கள்! டாப் 10 வரிசை!

நெட்பிளிக்ஸ் தளம் 

உலக அளவிலான பல மொழித் திரைப்படங்கள் இந்த நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும். உலக தர வரிசையில் உள்ள படங்களுக்கு சற்றும் தளர்ந்தது இல்லை என தமிழ் படங்கள் நிரூபித்து வருகின்றன. இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்திய மொழி திரைபடங்களின் டாப் வரிசையில் சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆன விஜய்சேதுபதி நடிப்பில் உருவான படமான மகாராஜா உள்ளது. கடந்த ஜூன் மாதம் வெளியான இப்படம் 100 கோடி வசூல் ஆகி இருந்தது. மேலும் இப்படம் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டிருந்தது. 

அடுத்ததாக கமல் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் வெளியான இந்தியன் 2 டாப் படங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் நானி நடித்து வெளியான சரிபோதாம் சனிவாரம் திரைப்படம் நேற்று  வெளியானது. அதுவும் டாப் படங்களின் வரிசையில் உள்ளது.

அமேசான் 

இந்திய மொழித் திரைப்படங்கள் அதிகம் வெளியாகும் ஒடிடி தளத்தில் மற்றொரு தளம் தான் அமேசான் பிரைம் ஆகும். இதில் பல நல்ல திரைபடங்கள் வெளியாகி உள்ளது. இது பல இந்தியர்கள் பயன்படுத்து ஒடிடி தலாமாகவும் இருந்து வருகிறது. இந்த தளத்தில் கடந்த ஜூலை மாதம் தனுஷ் நடித்து இயக்கி வெளிவந்த படம் ராயன் டாப் படங்களின் வரிசையில் பல வாரங்களாக முன்னிலை வகித்து வருகிறது.  

ஹாட்ஸ்டார் 

பல டிஸ்னி திரைப்படங்களும், பல டிவி சீரியல்களும் வெளியாகும் ஹாட்ஸ்டார் தளத்திலும் பல தமிழ் படங்கள் வெளியாகி டாப் வரிசையில் இடம் பிடித்து வருகின்றன. இதில் சில பழைய படங்களும் முன்னிலையில் உள்ளன. துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்து வெளியாகிய ஓகே கண்மணி இன்றளவும் டாப் படங்களின் வரிசையில் இடம் பிடித்து வருகிறது. 

மேலும் இந்திய படங்கள் மட்டும் வெளியாகும் சோனி லிவ், டெண்ட்கொட்டா, ஆஹா போன்ற பல ஒடிடி தளங்களும் உள்ளன. இதிலும் சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆன பல தமிழ் படங்கள் டாப் வரிசையில் உள்ளன. மேலும் உலக அளவிலான படங்கள் வெளியாகும் தளங்களிலும் தமிழ் படங்கள் முதன்மையான இடத்தில் இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பல புது இயக்குனர்களின் வருகையால் தமிழ் சினிமா படங்கள் உலக அளவில் பேசப்பட்டு வருக்கின்றன. ஆஸ்கார் பரிந்துரைக்கே பல படங்கள் செல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளன. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.