Top Cinema News: தனுஷ் மகனின் பாடலாசிரியர் அவதாரம், தமன்னாவுடன் ரிலேஷன்சிப் - இன்றைய டாப் சினிமா செய்திகள்-top cinema news on kollywood bollywood on aug 28 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top Cinema News: தனுஷ் மகனின் பாடலாசிரியர் அவதாரம், தமன்னாவுடன் ரிலேஷன்சிப் - இன்றைய டாப் சினிமா செய்திகள்

Top Cinema News: தனுஷ் மகனின் பாடலாசிரியர் அவதாரம், தமன்னாவுடன் ரிலேஷன்சிப் - இன்றைய டாப் சினிமா செய்திகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 29, 2024 04:42 PM IST

Top Cinema News: தனுஷ் மகனின் பாடலாசிரியர் அவதாரம், தமன்னாவுடன் ரிலேஷன்சிப், எமி ஜாக்சன் திருமண விடியோ என இன்றையா டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்.

Top Cinema News: தனுஷ் மகனின் பாடலாசிரியர் அவதாரம், தமன்னாவுடன் ரிலேஷன்சிப் - இன்றைய டாப் சினிமா செய்திகள்
Top Cinema News: தனுஷ் மகனின் பாடலாசிரியர் அவதாரம், தமன்னாவுடன் ரிலேஷன்சிப் - இன்றைய டாப் சினிமா செய்திகள்

தவேகா முதல் மாநாடு

தளபதி விஜய் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடித்து முடித்திருக்கும் புதிய படமான தி கோட் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது.

சனம் ஷெட்டிக்கு மிரட்டல்

உங்கள் போன் நம்பரில் இருந்து ஏகப்பட்ட பாலியல் மிரட்டல்கள் வந்துள்ளது. 25க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கைது செய்யப்படுவீர்கள் என நடிகை சனம் ஷெட்டிக்கு மிரட்டல் போன் கால் வந்ததாக விடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அந்த விடியோவில் போன் ஹேக் செய்வர்களிடமிருந்து உஷாராக இருக்க வேண்டும் எனவும், அவர்கள் அனுப்பும் அறியாத லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

கார் விபத்தில் சிக்கிய வில்லன் நடிகர்

தமிழில் ஏராளமான படங்களில் வில்லத்தனமான வேடங்களில் தோன்றியவர் சம்பத் ராம். சென்னை கிண்டியில் அவர் ஓட்டி சென்ற கார் மீது லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சம்பத் ராம் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார். தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

சிவகார்த்திகேயன் ஜோடியாகும் ஸ்ரீலீலா

தெலுங்கு சினிமாவில் இளம் நாயகியாக இருந்து வரும் ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயனின் 25வது படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வில்லனாக நடிக்கிறார்

பாடலாசிரியராக அவதாரமெடுத்த தனுஷ் மகன்

தனுஷ் இயக்கி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் மூலம் அவரது மூத்த மகன் யாத்ரா பாடலாசிரியர் அவதாரம் எடுத்துள்ளார். கோல்டன் ஸ்பாரோ என்ற பாடலை யாத்ரா எழுதியுள்ளார்.

நோலனின் ஓபன்ஹைமர், ஷேக்ஸ்பியர் மேக்பத் போன்றது எமர்ஜென்சி - கங்கனா

எமர்ஜென்சி என்ற படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடித்துள்ளார் நடிகை கங்கனா ரணவத். இந்தப் படம் செப்டம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன் ஹைமர் படத்துடன் ஒப்பிடலாம். ஷேக்ஸ்பியரின் மேக்பத் போன்ற சோகத்தை கொண்டது என்று கங்கனா ரணவத் கூறியுள்ளார்.

வீடு திரும்பிய பிரியங்கா சோப்ரா

அமெரிக்காவில் செட்டிலாகியுள்ள பிரியங்கா சோப்ரா தனிப்பட்ட காரணங்களுக்காகவும், பணி நிமித்தமாவகும் இந்தியாவுக்கு வந்தார். மும்பையில் தனது பணிகளை முடித்துவிட்டு மீண்டும் அமெரிக்கா சென்ற அவர் தனது மகள் மால்டியுடன் இணைந்து ஹோம் ஸ்வீட் ஹோம் என குறிப்பிட்டு என இன்டாவில் பகிர்ந்துள்ளார்

தமன்னாவுடனான ரிலேஷன்சிப் குறித்து விஜய் வர்மா

தமன்னாவுக்கும் எனக்கு இருக்கும் ரிலேஷன்ஷிப்பை மறைக்க விரும்பவில்லை. எனது உணர்வுகளுக்கு நான் கூண்டுக்குள் அடைக்க விரும்பவில்லை என தமன்னாவின் காதலரான விஜய் வர்மா கூறியுள்ளார்.

எமி ஜாக்சன் திருமண விடியோ

மிகவும் எளிமையாக காதலர் எட் வெட்ஸ்விக்கை கரம் பிடித்துள்ளார் நடிகை எமி ஜாக்சன். இத்தாலியில் உள்ள காஸ்டெல்லோ டி ரோக்கா சிலெண்டோவில் வெள்ளை தீமில் நடந்த எமி ஜாக்சன் திருமண விடியோ வெளியாகி வைரலாகியுள்ளது

வைரலாகும் அனுஷ்கா ஷர்மா - விராட் கோலி ஷாப்பிங்

பாலிவுட் ஸ்டார் ஜோடிகளாக இருந்து வரும் அனுஷ்கா ஷர்மா - கிரிக்கெட் வீர்ர விராட் கோலி ஆகியோர் ஷாப்பிங் செய்யும் பழைய ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. தனது இன்ஸ்டா ஸ்டோரி மூலம் மும்பைக்கு வர இருப்பது பற்றி அனுஷ்கா ஷர்மா குறிப்பு கொடுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.