டாப் 10 பாடல்கள் இன்று! இசை ஆப்களில் முதல் வரிசையில் உள்ள தமிழ் பாடல்கள்!
பல ஆண்டுகளுக்கு முன் கிராமாபோன் வாயிலாக பாடல்கல் கேட்டு ரசிக்கப்பட்டன. அந்த சாதனங்கள் படிப்படியாக பரிமாண வளர்ச்சி அடைந்து ஸ்பீக்கர், ரேடியோ, டிவி என பலவற்றிற்கு பின்னர் தற்போது நமது மொபைல் போன்கள் வாயிலாகவே பாடல் கேட்கும் நிலைக்கு வந்துள்ளோம்.
பல ஆண்டுகளுக்கு முன் கிராமாபோன் வாயிலாக பாடல்கல் கேட்டு ரசிக்கப்பட்டன. அந்த சாதனங்கள் படிப்படியாக பரிமாண வளர்ச்சி அடைந்து ஸ்பீக்கர், ரேடியோ, டிவி என பலவற்றிற்கு பின்னர் தற்போது நமது மொபைல் போன்கள் வாயிலாகவே பாடல் கேட்கும் நிலைக்கு வந்துள்ளோம். இந்நிலையியில் அனைத்து இடங்களிலும் இசை நிரம்பி இருந்தாலும், தொழில்நுட்ப மேற்கத்திய இசை திரைத்துறையின் வாயிலாகவே எளிய மக்களையும் சென்றடைந்தது. மேலும் திரைத்துறையின் வரவாலேயே நாட்டுப்புற இசையும் மெருகேறத் தொடங்கியது. அந்த வரிசையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் ஆயிறக்கணக்கான படங்களும் அதன் பாடல்களும் வெளியாகி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
திறமையான இசையமைப்பாளர்களுக்கு தமிழ்த் திரைத் துறையில் என்றும் பஞ்சமில்லை. அந்த வரிசையில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இசையமைப்பாளர்களின் பாடல் அதிகமாக கேட்டக்கப்படுகின்றன. ரேடியோ, டிவி என பாடல் கேட்கும் படலம் குறைந்து தற்போது இணையம் வாயிலாக நமக்கு பிடித்த பாடலை மொபைல் போனிலேயே கேட்கலாம். இன்று இணையத்தில் டாப் 10 வரிசையில் இருக்கும் தமிழ் பாடல்களை இங்கு காணலாம்.
தி கோட் -மட்ட
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்டம்பர் மாதம் 5 அன்று வெளியானது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள மட்ட பாடல் முதலாவது இடத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே இந்த பாடல் யூட்யூப் மற்றும் மற்ற பாடல் செயலிகளில் இதுவே டாப் வரிசையில் உள்ளது. இப்பாடலில் நடிகை திரிஷா, விஜயுடன் சேர்ந்து ஆடியிருப்பார்.
வேட்டையன் - மனசிலயோ
த. செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10 அன்று வேட்டையன் படம் ரீலிஸ் ஆனது.சில மாத்திற்கு முன்பு வெளியீடப்பட்ட இப்படத்தின் மனசிலயோ பாடல் அன்றில் இருந்து இன்று வரை டாப் வரிசையில் இருந்து வருகிறது. அனிரூத் இசையமைத்துள்ள இந்த பாடலில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரல் ai தொழில்நுட்பம் மூலம் கொண்டுவரப்பட்டது. மேலும் இப்பாடலை அவரது மகன் யூகேந்திரன் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
அமரன் - மின்னலே
வரும் தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வர இருக்கும் அமரன் படத்தின் ஹே மின்னலே பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகியது. இந்த படத்திற்கு ஜி. வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது இந்த பாடல் மூன்றாவது இடத்தில் உள்ளது.
தங்கலான் - மினிக்கி மினிக்கி
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து நான்காவது இடத்தில் உள்ளது. இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இப்பாடலை சிந்தூரி விஷால் பாடியுள்ளார்.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்- கோல்டன் ஸ்பேரோ
தனுஷ் இயக்கத்தில் வெளியாக உள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் கோல்டன் கோல்டன் ஸ்பேரோ ஐந்தாவது இடத்தில் உள்ளது. இப்பாடலை தெருக்குரல் அறிவு, தனுஷ் மற்றும் சுப்லக்ஷனி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
வேட்டையன் -ஹண்டர் வன்டான்
அனிரூத் இசையில் வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள ஹண்டர் வன்டான் பாடல் ஆறாவது இடத்தில் உள்ளது. இது அதிரடி இசையில் இணைய உலகை கலக்கி வருகிறது.
லப்பர் பந்து - சில்லாஞ்சிறுக்கியே
நடிகர் தினேஷ் மற்றும் ஹரிஸ் கல்யாண் நடிப்பில் வெளி வந்த லப்பர் பந்து படத்தில் இடம் பெற்றுள்ள சில்லாஞ்சிறுக்கியே பாடல் ஏழாவது இடத்தில் உள்ளது. இப்பாடலிற்கு சான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும் பாடகர் பிரதீப் குமார் பாடியுள்ளார்.
தி கோட் - சின்ன சின்ன கண்கள்
விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தில் பவதாரணியின் ai குரல் மற்றும் விஜய் பாடியுள்ள சின்ன சின்ன கண்கள் பாடல் எட்டாவது இடத்தில் உள்ளது.
கேம் சேஞ்சர் - ரா மச்சா
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் ரா மச்சா பாடல் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இப்பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார்.
மெய்யழகன் - டெல்டா கல்யாணம்
நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியாயன மெய்யழகன் படத்தின் டெல்டா கல்யாணம் பாடல் பத்தாவது இடத்தில் உள்ளது. இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்
டாபிக்ஸ்