ஜெயம் ரவியின் இயக்குனர் அவதாரம் முதல் தீபிகா படுகோன் ரன்வீர் சிங்கின் குழந்தையின் பெயர் வரை! இன்றைய டாப் 10 சினிமா!
கோலிவுட் முதல் பாலிவுட் வரை நிகழந்த முக்கிய நிகழ்வுகளை டாப் 10 சினிமா செய்திகளாக தெரிந்து கொள்ள இந்த தொகுப்பை முழுமையாக படிக்கவும்.

ஜெயம் ரவியின் இயக்குனர் அவதாரம்: நடிகர் ஜெயம் ரவியின் பிரதர் படம் இந்த தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக இவர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்து இருந்தார். அப்பேட்டியில் தான் இயக்குநராக களம் இறங்க உள்ளதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.மேலும் கூறுகையில் தன்னிடம் மூன்று கதைகள் கைவசம் உள்ளதாகவும் முதலில் யோகி பாபுவுடன் இணைந்து முதல் படத்தை இயக்க உள்ளதாகவும் ஜெயம் ரவி தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்க உள்ளதாகவும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
லப்பர் பந்து இயக்குனருடன் தனுஷ்: தனது அறிமுக படத்திலேயே பலரத் பாராட்டைப் பெற்ற இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, வசூல் ரீதியாகவும் லப்பர் பந்து அடித்து நொறுக்கியது. இதனை அடுத்து இந்த இயக்குனருக்கு பல பெரிய ஹீரோக்களிடம் இருந்து அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது நடிப்பு, இயக்கம், பாடல் என அனைத்திலும் கலக்கி வரும் தனுஷ் உடன் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாறுபட்ட கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பதில் வல்லவர். இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
ஐஸ்வர்யா ராய்க்கு வாழ்த்து சொல்லாத பச்சன் : உலக அழகிகள் எத்தனை பேர் வந்தாலும் இந்திய மக்கள் மனதில் என்றைக்கும் மாறாமல் இருப்பதி ஐஸ்வர்யா ராய் மட்டும் தான். அந்த அளவிற்கு ரசிகர்களைக் கொண்ட இவர் நேற்று அவரது 51 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். கடந்த 2007 ஆம் ஆண்டு அமிதா பச்சனின் மகன் மற்றும் பாலிவுட் ஹீரோவான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார். கடந்த சில மாதங்களாக ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் பிரச்சனை எனவும் விவகாரத்து பெற உள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் நேற்றைய ஐஸ்வர்யா பிறந்தநாளிற்கு அபிஷேக் எந்த வாழத்தையும் தெரிவிக்கவில்லை. சமீப காலமாக இவர்கள் இருவரும் தனித் தனியாகவே பொது இடங்களுக்கு செல்கின்றனர். குறிப்பாக உலமே உற்று நோக்கிய ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கூட இருவரும் தனித்தனியே கலந்து கொண்டனர்.
