திமுக மேல அவ்வளவு வன்மம்.. அந்தம்மாக்கு நாக்குலதான் சனி.. கஸ்தூரி கந்தல் ஆவது உறுதி!
எதிர்க்கலாம்.. தப்பில்லை.. நீங்க கருத்தை எடுத்து வைங்க.. சாதாரணமா நல்ல வார்த்தை சொன்னால் 200 ரூபாய் வாங்கிட்டன்றாங்க. பொது அறிவு இருக்கவங்களுக்கு தெரியும். திமுக அரசு கடந்த 50 ஆண்டுகாலமா செய்ற கொடுமைகள் என்ன என்று நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் போதே அதுக்கும் ஈக்குவலா அவங்க பண்ண நன்மைகளை பார்கணும்ல
வன்கொடுமை தடுப்பு சட்டம் போல பிராமணர்களை பாதுகாக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்று பேசினார். அதில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் பத்திரிகையாளர் சேகுவேரா BBT Cinema யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் நடிகை கஸ்தூரி மறைந்து இருக்க அவருடைய வாய்ச்சொல் தான் காரணம். ஒரு பழமொழி சொல்வார்கள் இல்லையா.. பிள்ளையார் பிடிக்க போய் அனுமான் ஆகி விட்டது என்று.. அந்த மாதிரி ஏதோ ஒரு வன்மத்தோடு.. நான் திமுகவை சாடுகிறேன். திமுக குடும்பத்தை சேர்ந்த தலைவர்களை சாடுகிறேன் என்று பேச வந்து அத பேச தெரியாம பேசிட்டார். ரொம்பநாளாவே நான் பார்த்துகொண்டு இருந்தேன். இது ஓவர் பேச்சு. கஸ்தூரி எங்காவது ஒரு இடத்தில் இந்த மாதிரி சிக்குவாங்கன்னு. என்றைக்கு திராவிடியா பசங்க என்று புதுசா ஒரு வார்தையை கண்டு பிடித்து பேசினாரோ அப்பவே அவங்களுக்கு ஏழரை வந்து உட்காந்தாச்சு.. இப்ப ஏழரை உச்சத்தில் நடக்குதுன்னு நினைக்குறேன்.
நான் ஒரு விஷயத்தை ரொம்ப அழுத்தமா பதிவு பண்றேன். குறிப்பிட்ட அரசியல் கட்சியை, அல்லது குறிப்பிட்ட ஒரு தலைவரை கோபத்தில் கூட சாடிட்டு போய் விடலாம். ஆனால் அந்த வன்மம் இருக்குல.. அவங்கள திட்டியே தீரணும்னு வன்மத்தோட திட்டுறது இருக்குல.. அத பல பேர் செய்றாங்கள.. அவன் எல்லாருமே சிக்கல்ல மாட்டுறான்.
நீங்க அரசியல் ரீதியா எதிர்கலாம்
நீங்கள் அரசியல் ரீதியா கருத்தியல் ரீதியா எதிர்க்குறீங்களா.. அப்படி எதிர்க்கலாம்.. தப்பில்லை.. நீங்க கருத்தை எடுத்து வைங்க.. சாதாரணமா நல்ல வார்த்தை சொன்னால் 200 ரூபாய் வாங்கிட்டன்றாங்க. பொது அறிவு இருக்கவங்களுக்கு தெரியும். திமுக அரசு கடந்த 50 ஆண்டுகாலமா செய்ற கொடுமைகள் என்ன என்று நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் போதே அதுக்கும் ஈக்குவலா அவங்க பண்ண நன்மைகள் என்னவென்று பார்கணும்ல.
வழிகாட்டுதல் கொடுத்தது திமுக ஆட்சி
பிராமணர்களுக்கு என்ன கொடுமை பண்ணிட்டாங்க. நீங்க சொல்லுங்க. பெரியார் காலத்தில் இருந்தே பார்த்தீங்கனா பிராமண சமூகத்தில் பெண்கள் சுதந்திரம்.. பெண் உரிமை என்பதை பார்த்தால்.. கலைஞர் ஆட்சியில் பெண்ணுக்கு சொத்தில் சம உரிமை என்று பார்த்தால் திமுக அரசுதான் அமல் படுத்துனாங்க. உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு வரும்போது திமுக அரசு செய்த அந்த சட்டத்தை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதன் பிறகு சென்ட்ரல்லயும் கொண்டு வரப்படுது. அப்போ உச்ச நீதிமன்றத்திற்கும் மத்திய அரசுக்கும் வழிகாட்டுதல் கொடுத்தது திமுக ஆட்சி. அதன் பிறகு பலமுறை பெண்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வந்துள்ளது.
இது பிராமண பெண்களுக்கு மறுக்கப்படுகிறதா.. ஆணாதிக்க சமூகத்திற்கு கொடுத்த சாட்டையடி அது இதை போகிற போக்கில் கடந்து விட்டு பெண்களுக்கு எதிரானவங்க அவங்கன்னு சொல்லுறது எந்த வகையில் சரி.
கஸ்தூரி பேசுவதை நிறைய விஷயங்கள் நான் பார்த்திருக்கிறேன். முழுக்க முழுக்க திமுக மீது வன்மம்.
திமுக ஆட்சியில் நிறைய போதை பொருட்கள் புழக்கத்தில் இருக்குன்னு குறிப்பிட்ட விஷயத்தை எடுத்து பேசினால் கூட சரி.. நேற்று பேப்பரில் கூட வந்தது. ஒரு நடிகையே பிடிபட்டுருக்காங்க அப்படின்னு சொல்லலாம். ஆனால் நீங்க எடுத்த உடனே திமுக அரசை சாடணும் என்ற எண்ணத்தில் பேசுவது ஒரு அருவருப்பாக இல்லையா.. இத எல்லாம் ஒரு ஆளுன்னு கூப்பிட்டு வச்சு அர்ஜூன் சம்பத் பேச வைப்பது எவ்வளவு தப்பு.
இவங்க பேசுறதுல ஏதாவது ஒரு ஆதாரம் இருக்கா.. இப்ப நீ போய் ஒழிஞ்சுக்கிட்ட.. வீராங்கனை தான நீ.. நீ நல்ல விஷயம் பேசிருக்க.. சாதி வன்மம் கூட இல்ல.. சொன்ன வார்தையை கவனித்தீர்களா.. தெலுங்கு மன்னர்களுக்கு அரண்மனையில் கூட இருக்கும் பெண்களுக்கு பணிவிடை செய்ய வந்தவர்கள்னு நீங்க சொல்றீங்களே.. அது யாருன்னு கேட்டா தெலுங்கர்கள்னு நீ சொல்லிட்டு போறிங்க.. அதுக்கப்பறம் தெலுங்கர் இனம்னு சொல்ல தெலுங்கு மக்கள்னு சொல்ல.. ஒரு குடும்பத்தை சொன்னேன்றீங்க அப்படி சொல்றது தப்பு தான. ஒரு நபரை சொன்னாலும் தவறுதான. அப்ப உங்கள தூக்கி உள்ள வைக்குறதுல தப்பே கிடையாது.
போலீஸ் நினைச்சா இவங்க என்ன பூலாந்தேவியா.. இல்ல வீரப்பனா..இங்க எவன் வீட்டுலயாவது உள்ள ஒளிஞ்சுக்கிட்டு இருக்க. இவங்கள பிடிக்க இரண்டு நிமிஷம் ஆகாது. ஒரு வாரம் தலைமறைவா இரு.. எப்ப வருவாங்க எப்ப வருவாங்கன்னு ஒரு பயத்துலயே இருக்கட்டும். ஆனால் கைது நடவடிக்கை பண்ணணும் என்பது உள்ளிட்ட பல கருத்துகளை பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்