Top 10 Cinema: துட்டு அள்ளும் தங்கலான்.. நித்யா கொடுத்த பதிலடி.. உள்குத்து குத்திய இமான்! - டாப் 10 சினிமா!
Top 10 Cinema: தங்கலான் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் முதல் டி. இமானின் சர்ச்சை பேச்சு வரை - இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!

1. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகியிருக்கும் புதிய திரைப்படம் 'டிமான்ட்டி காலனி 2'. இதில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
டிமான்ட்டி காலனி 2 படமானது இந்தியாவில் மூன்று நாட்களில் ரூ.10.2 கோடி வசூல் செய்து சாதனைப் புரிந்துள்ளது. குறிப்பாக, ரிலீஸான முதல் நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் ரூ.3.55 கோடியும், ஆகஸ்ட் 16ஆம் தேதி ரூ.2.35 கோடியும், ஆகஸ்ட் 17ஆம் தேதி ரூ.4.3 கோடியும் வசூலித்துள்ளது. உலகளவில் ரூ.15.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாகத் தெரியவருகிறது. இதனால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
2. இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம், தங்கலான். இந்தத் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸான தங்கலான் திரைப்படம் உலகளவில் ரூ.40 கோடி வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.