Box Office Goat: வேறு தலைக்கு மாறும் கிரீடம்.. தடுமாறும் தளபதி.. ‘தி கோட்’ படத்தின் முதல் நாள் வசூல் என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Box Office Goat: வேறு தலைக்கு மாறும் கிரீடம்.. தடுமாறும் தளபதி.. ‘தி கோட்’ படத்தின் முதல் நாள் வசூல் என்ன?

Box Office Goat: வேறு தலைக்கு மாறும் கிரீடம்.. தடுமாறும் தளபதி.. ‘தி கோட்’ படத்தின் முதல் நாள் வசூல் என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Sep 05, 2024 07:50 PM IST

Box Office Goat: நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கோட்’ படத்தின் வசூல் விபரங்களை பார்க்கலாம்.

Box Office Goat: வேறு தலைக்கு மாறும் கீரிடம்.. தடுமாறும் தளபதி.. ‘தி கோட்’ படத்தின் முதல் நாள் வசூல் என்ன?
Box Office Goat: வேறு தலைக்கு மாறும் கீரிடம்.. தடுமாறும் தளபதி.. ‘தி கோட்’ படத்தின் முதல் நாள் வசூல் என்ன?

நடிகர் விஜயின் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படமானது இன்று வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்தத்திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது. இந்த நிலையில், sacnilk தளம் வெளியிட்ட தகவலின் படி, இந்தப்படமானது இன்றைய தினம் இந்தியாவில் 25.55 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே 'தி கோட்'. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், யோகி பாபு, வைபவ், பிரேம்ஜி, அஜ்மல், விடிவி கணேஷ், அர்விந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தின் விமர்சனம் இங்கே!

கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர Special Anti terrorist squad team சார்பில் காந்தி ( விஜய்), அஜய் (அஜய்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் ( பிரபு தேவா) ஆகியோர் கொண்டு செல்ல ஆயுதங்களுடன் களமிறங்க, அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மேனன் ( மோகன்) இறந்து விடுவதாக காட்டப்படுகிறது.

இதற்கிடையே தாய்லாந்திற்கு மனைவி அனு ( சினேகா) உடன் செல்லும் காந்தி, தன்னுடைய மகனை பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது. ஆனால் பின்னாளில் அவனை காந்தி பிரச்சினை ஒன்றில் சந்திக்கிறார். அந்த பிரச்சினை என்ன? அதில் காந்திக்கு வில்லனாக ஜீவன் மாறியது ஏன்? என்பது படத்தின் மீதிக்கதை.

புதிய களத்தில் தளபதி விஜய்

நீண்ட நாட்களாக சீரியஸாகவே திரையில் தோன்றி வந்த விஜய்க்கு அவரின் எல்லா வித பக்கங்களையும் காட்ட தளம் அமைத்து கொடுத்து இருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. அதன் படி படத்தில் விஜய் வெளிப்படுத்தி இருக்கும் காமெடி, லூட்டி, எமோஷன், சைலண்ட் ரியாக்ஷன், டயலாக் டெலிவரி, ஆக்ஷன் என அனைத்தும் ரசிக்க வைத்து இருக்கிறது. குறிப்பாக அவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் புதுமையாக இருக்கிறது. டி ஏஜிங் செய்யப்பட்ட விஜயின் கரெக்ஷன் ஓகே ரகம்தான் என்றாலும், அந்த கதாபாத்திரத்தில் விஜய் வெளிப்படுத்திய நடிப்பு மிரட்டல்.

சினேகா முடிந்த அளவு எமோஷனை கடத்த முயன்று கவனம் இருந்தாலும், அந்த இடம் கூட மீனாட்சிக்கு இல்லை..பால் வடியும் மோகனின் முகத்தில் வில்லனிசம் சுத்தமாக ஒர்க் அவுட் ஆக வில்லை. பிற எந்த கதாபாத்திரங்களும் மனதில் நிற்காமல் போனது சோகத்திலும் பெருஞ்சோகம்.

முன்கூட்டியே உடைந்த சஸ்பென்ஸ்

படத்தின் பெரும் பலவீனாக முன்னமே சோசியல் மீடியாவில் நிலவிய படத்தின் சஸ்பென்ஸ்கள் சார்ந்த தகவல்கள் மாறி இருக்கின்றன. காரணம், அவை அனைத்தும் படத்தில் அப்படியே இருக்கின்றன. அதனால், அடுத்து வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு பெரிய ஆர்ப்பரிப்பை கொடுக்க வில்லை.அதே போல படத்தில் ஜீவன் வில்லனாக மாறுவதற்கு சொல்லப்பட்ட காரணம் படத்தின் சுவாரசியத்தை ஒட்டு மொத்தமாக குறைத்து விட்டது.

அதன் பின்னர் வரும் காட்சிகளின் திரைக்கதை வேகமாக இருந்தாலும், அவை நம்முடன் ஒட்டவில்லை. ஸ்பார்க் பாடல் இடம் பெற்ற இடம் கடுப்பின் உச்சம். இரண்டாம் பாதியில் யோகி பாபு கவுண்டர்களை அடுக்கி சிரிக்க வைக்க முயன்றாலும், அவருக்கு படத்தில் கொடுக்கப்பட்ட இடம் தவறாக இருந்த காரணத்தால், அவையும் நம்மை சிரிக்க வைக்க தவறுகிறது.

ஸ்கெட்ச் போட்டு அப்பா - மகன் கான்ஃபிளிக்ட்டை திரைக்கதையில் வைத்து விளையாட நினைத்த வெங்கட், சண்டையில் அசைவுகளை வைத்தே அவன் ஜீவன் என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்ததை, அவ்வளவு திறமை வாய்ந்த காந்தி கண்டுபிடிக்க மாட்டார் என்று நினைத்தது எப்படி என்று சுத்தமாக புரியவில்லை. கிளைமாக்சில் ஐபில் மேட்சையும், திரைக்கதையையும் ஒரு புள்ளியில் கொண்டு வந்து கதை நகர்த்திய விதத்தில் வெங்கட் பிரபுவின் முத்திரை இருக்கிறது.

யுவன்சங்கர் ராஜா பங்களிப்பு என்ன?

படத்தின் ஆகப்பெரிய பலவீனம் யுவனின் பின்னணி இசை. ஆம், முதல் பாதியில் அவரின் பின்னணி இசை, காட்சிகளின் உயிர்ப்பை கடத்த பெரிதாக உதவவில்லை. இரண்டாம் பாதியில் ஏதோ முயன்று இருக்கிறார்.

ஓப்பனிங் பாடலில் கரெக்ஷன், மெலடி பாடலுக்கு பதிலாக இளையராஜா பாடல், பின்னணி இசையில் முத்திரை பதித்து படத்திற்கு பலம் சேர்க்காமல் போனது உள்ளிட்டவை யுவன் இந்த வாய்ப்பை அலட்சிய போக்குடன் கையாண்டு இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

படத்தின் திரைக்கதை சுவாரசியமாக இருந்த போதிலும் ஆனாலும் வெங்கட் பிரபு படங்களில் கதையில் காணப்பட்ட அழுத்தம் இல்லாமல் போனது கோட்டை, கோட்டை விட வைத்து இருக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.