The Goat: ‘தேசத்தந்தை பெயர தூக்குங்க.. அப்புறம் அந்த கெட்ட வார்த்தையெல்லாத்தையும்..’ - கோட் படத்தின் நீளம் என்ன?
The Goat: நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாக இருக்கும் கோட் படத்தின் நீளம் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. -கோட் படத்தின் நீளம் என்ன?
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய நடிகர் விஜய்யின் 68 ஆவது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. இதனை சுருக்கமாக 'தி கோட்' என்று அழைக்கிறார்கள். இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், வைபவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கும் இந்தப்படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகி இருக்கிறது.
எவையெல்லாம் நீக்கப்பட்டு இருக்கின்றன
அதில், சென்சார் குழு கோட் படத்தில் நீக்க வேண்டிய காட்சிகள், வார்த்தைகள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு இருக்கிறது. அதன்படி, படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கெட்ட வார்த்தைகளை நீக்க சொல்லி இருக்கும் சென்சார் குழு, தேச தந்தை வார்த்தையை பயன்படுத்த தடை விதித்து இருக்கிறது.
அதே போல படத்தில் பெண் ஒருவர் வெளிப்படுத்தும் ரியாக்ஷன் காட்சியையும் நீக்க சொல்லி இருக்கும் சென்சார் குழு, ஒரு காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் மதுபானத்தின் பெயரையும் எடுக்கச்சொல்லி இருக்கிறது. அத்துடன் படத்தில் மது, புகையிலை காண்பிக்கப்படும் இடங்களில் மது, புகையிலை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு தொடர்பான வாசகங்களை இடம் பெற அறிவுறுத்தி இருக்கின்றனர்.
கூடவே, கழுத்தை அறுப்பது போன்ற காட்சி ஒன்றை சுருக்குமாறு கூறியிருக்கும் சென்சார் குழு, படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் பெயர்களை தமிழில் போடவும் வலியுறுத்தி இருக்கிறது. இந்த திருத்தங்களின் படி கோட் படத்தில் சென்சார் குழு 00.03 நிமிடங்களை நீக்க கூறி இருந்த நிலையில், அதன்படி காட்சிகளை நீக்கிய படக்குழு 00.02 நிமிட அளவு காட்சியை சேர்த்து இருக்கிறது.
கூடவே, வெங்கட் பிரபுவின் படங்களில் இறுதியில் வழக்கம் போல் சேர்க்கப்படும் ப்ளாப்பர்ஸூம் 3 நிமிட அளவிற்கு சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஆக, எல்லாவற்றையும் வைத்து மொத்தமாக பார்க்கும் போது கோட் திரைப்படத்தின் நீளம் 3 மணி நேரம் 3 நிமிடமாக வந்திருக்கிறது.
முன்னதாக, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். தி கோட் படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யு/ஏ சான்றிதழ்
இந்தப்படத்தில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
கோட் திரைப்படத்தில் யுவனின் பாடல்களுக்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், அதற்கு வெங்கட் பிரபு பதில் கொடுத்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “கோட் படத்தில் யுவன் இசையமைத்த பாடல்களைப் பொறுத்தவரை, அதற்கு கலவையான விமர்சனங்கள் வந்ததை நாங்கள் கவனித்தோம். ஆனால், நீங்கள் படம் பார்த்து விட்டு வெளியே வரும் பொழுது பாடல்கள் அனைத்தும் உங்களுக்கு விஷுவல் ட்ரீட் ஆக அமைந்து பிடித்துதான் வெளியே வருவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்தப்படத்தில் நடித்த பிரபுதேவா பிரசாந்த் உள்ளிட்டவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காரணம் என்னவென்றால், இந்தப்படத்தில் எல்லா கேரக்டர்களுக்கும் அதிக முக்கியத்துவம் இருந்த போதும், ஒன்றாக அவர்கள் நடிக்க ஒத்துக் கொண்டது பெரிய விஷயம். இது உங்களுக்கு நிச்சயமாக ட்ரீட்டாக அமையும். எந்த இடத்திலும் படம் முகம் சுளிப்பது போல நிச்சயமாக இருக்காது.
மேலும் பேசிய அவர் “ மங்காத்தா திரைப்படத்தின் போது, அஜித் சாரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்று கூறி இருக்கிறேன். அதேபோல விஜய் சாரிடம் இருந்தும் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக ஒழுக்கமாக எப்படி வேலை செய்வது என்பதை அவரிடம் இருந்து நான் இந்தப் படத்தில் கற்றுக் கொண்டேன்.
அவர் இன்று அவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார். ஆனால், அவர் அவ்வளவு ஒழுக்கமாக வேலை செய்து கொடுக்கிறார். அவ்வளவு பணிவாக, சிம்பிளாக எங்களிடம் நடந்து கொண்டார். முதலில் நாங்கள் உண்மையிலேயே விஜய் சாருடன் எப்படி வேலை செய்யப் போகிறோம் என்பது குறித்து பயந்து இருந்தோம்.
ஆனால், அவர் அதை மிகவும் ஈசியாக்கிவிட்டார். ஆகையால், நாம் எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், நம்மை சுற்றி உள்ளவர்களை சௌகரியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்