The Goat Trailer : நம்பிக்கையை காப்பாற்றினாரா வெங்கட் பிரபு? - வெளியானது விஜயின் கோட் ட்ரெய்லர்!-thalapathy vijay looks intense in venkat prabhu yuvan shankar raja goat trailer - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  The Goat Trailer : நம்பிக்கையை காப்பாற்றினாரா வெங்கட் பிரபு? - வெளியானது விஜயின் கோட் ட்ரெய்லர்!

The Goat Trailer : நம்பிக்கையை காப்பாற்றினாரா வெங்கட் பிரபு? - வெளியானது விஜயின் கோட் ட்ரெய்லர்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 17, 2024 06:48 PM IST

GOAT Trailer: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜயின் கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

GOAT Trailer: நம்பிக்கையை காப்பாற்றினாரா வெங்கட் பிரபு? - வெளியானது விஜயின் விஜயின் கோட் ட்ரெய்லர்!
GOAT Trailer: நம்பிக்கையை காப்பாற்றினாரா வெங்கட் பிரபு? - வெளியானது விஜயின் விஜயின் கோட் ட்ரெய்லர்!

GOAT Trailer: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் 25 ஆவது திரைப்படமும், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய நடிகர் விஜய்யின் 68 ஆவது படமாகவும் உருவாகி இருக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இதனை சுருக்கமாக கோட் என்று அழைக்கிறார்கள்.

வெங்கட் பிரபு உடன் முதன்முறையாக இணைந்த விஜய்

'கோட்' படத்திற்காக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாகவும், இயக்குநர் வெங்கட் பிரபு உடன் முதல் முறையாகவும், இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் இரண்டாவது முறையாகவும் விஜய் இணைந்து உள்ளார்.

கலவையான விமர்சனங்கள்

இந்தப்படத்தில் இருந்து முன்னதாக டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால் படத்தில் இருந்து வெளியான விசில் போடு, சின்ன சின்ன கண்கள், ஸ்பார்க் உள்ளிட்ட பாடல்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இன்னும் குறிப்பாக அண்மையில் வெளியான ஸ்பார்க் பாடலில் விஜயின் தோற்றமும், யுவனின் இசையும் கடுமையான ட்ரோல்களுக்கு உள்ளானது. இந்த நிலையில் இன்றைய தினம் மாலை 6 மணிக்கு தி கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

படத்தில் நடித்து இருப்பவர்கள்

பிரபல நடிகர்களான பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல் அமீர், மீனாக்ஷி சௌத்ரி, வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், விடிவி கணேஷ், யுகேந்திரன் வாசுதேவன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், பார்வதி நாயர், அபியுக்தா மணிகண்டன் (அறிமுகம்) உள்ளிட்டோர் நடிக்கும் 'கோட்' படத்தில் மோகன் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்.  

மிகுந்த பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்களில் தளபதி விஜய் நடித்துள்ளார். இதற்காக அமெரிக்கா சென்ற அவர், அதி நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தனது உடல் அமைப்பு, தோற்றம், அசைவுகள் உள்ளிட்டவற்றை துல்லியமாக பதிவு செய்தார். 'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு வி எஃப் எக்ஸ் செய்த லோலா நிறுவனம் 'கோட்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளில் பங்காற்றி இருப்பது ஆகும். 

இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றி இருக்கிறார். 'பிகில்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவர் இணைந்து இருக்கிறார். இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரம்மாண்டமான வகையில்'கோட்' உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.