The GOAT Trailer: தரலோக்கலில் தளபதி.. வெங்கட் பிரபு ட்விஸ்ட்ட எங்க வச்சாரு பார்த்தீங்களா..கோலுச்சும் கோட் ட்ரெய்லர்!
GOAT Trailer: கோட் படத்தின் தெலுங்கு ட்ரெய்லரில் வேறுவிதமான எண்டிங் வைக்கப்பட்டு இருக்கிறது. - வெங்கட் பிரபு ட்விஸ்ட்ட எங்க வச்சாரு பார்த்தீங்களா?
GOAT Trailer: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் 25 ஆவது திரைப்படமும், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய நடிகர் விஜய்யின் 68 ஆவது படமாகவும் உருவாகி இருக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இதனை சுருக்கமாக கோட் என்று அழைக்கிறார்கள்.
இந்தப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் ட்ரெய்லருக்கான வெர்ஷனில் கிளைமாக்ஸில் ‘மருதமலை மாமணியே’ என்ற பாடலை விஜய் பாட ட்ரெய்லர் முடிகிறது. ஆனால் தெலுங்கில் அப்படி ட்ரெய்லர் முடிக்கப்படவில்லை. குறிப்பாக இறுதியில் மிஷின் இம்பாசிபிள் பின்னணி இசையை குறிப்பிடும் வகையில் விஜய் செயல்படுகிறார். ட்ரெய்லர் கீழே!