பரிதாபமாக பறிபோன 6 உயிர்கள்.. “துயரில் இருந்து வெளிவரவே.. மனம் தவிக்கிறது” - விஜய் கண்ணீர் பதிவு! - சோகத்தில் தவெக!
தவெக மாநாட்டுக்கு வரும் வழியில் விபத்தில் சிக்கியவர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
தவெக மாநாட்டுக்கு சென்றிருந்த அக்கட்சி தொண்டர்களில் 6 பேர் பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
6 பேர் உயிரிழப்பு
விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒருபுறம் திரள, ஏராளமான மக்களும் மாநாட்டுத் திடலுக்கு சென்று இருந்தனர். அதிகமான மக்கள் கூடும் வாய்ப்பு இருந்த காரணத்தால், பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்ணும் கருத்துமாக செய்யப்பட்டு இருந்தன.
இருப்பினும், தவெக மாநாட்டுக்கு சென்று இருந்த தொண்டர்களில் 6 பேர் பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு விஜய் ஆறுதல் தெரிவிக்கவில்லை என்று குடும்பத்தார் தரப்பில் இருந்து புகார் எழுந்தது. இந்த நிலையில் தவெக கட்சியின் தலைவர் விஜய் பதிவு ஒன்றை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.