Actor krishna died: தெலுங்கு சினிமா ஹீரோ, மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா மறைவு
ஐந்து தசாப்தங்களாக திரையிலகில் நடிகர், தயாரிப்பாளர், தெலுங்கு சினிமா ரசிகர்களால் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்பட்ட கிருஷ்ணா மாரடைப்பால் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 79.
தெலுங்கு சினிமாக்களில் 1965 முதல் நடித்து வருபவர் கிருஷ்ணா. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த கிருஷ்ணா ஐந்து தசாப்பதங்களுக்கும் மேலாக திரையுலகில் இயங்கி வந்தார். நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநராகவும் கிருஷ்ணா இருந்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மருத்துவமனையில் அவருக்கு சிபிஆர் சிகிச்சை கொடுக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவரை மருத்துவர்கள் கண்காணித்தனர். அவரது உடல்நிலை கவலை அளிக்கும் வகையில் இருந்த காரணத்தால் வென்டிலேட்டர் பொருத்தபட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையான இவர் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த கிருஷ்ணா 1965 ஆம் ஆண்டுக்கு பிறகு பிரதான ரோல்களில் நடிக்க தொடங்கினார்.
தெலுங்கு சினிமாவில் வித்தியாசமான கதையம்சங்களுடன், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். தனது 69வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ககிருஷ்ணாவுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் என 5 பேர் வாரிசுகளாக உள்ளனர். கிருஷ்ணாவின் இளைய மகன் மகேஷ் பாப தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார்.
கிருஷ்ணாவின் இறப்புக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரவித்து வருகி்ன்றனர்.