HanuMan: முறிந்த எலும்பு, கண்களில் காயம்.. அனுமன் படப்பிடிப்பில் தேஜா சஜ்ஜாவிற்கு விழுந்த அடிகள்
அனுமன் படப்பிடிப்பின் போது தேஜா சஜ்ஜா கிட்டத்தட்ட ஒரு கண்ணை இழந்தார்.
அனுமன் படப்பிடிப்பின் போது தேஜா சஜ்ஜா தான் நிறைய காயப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். ஒரு படத்திற்காக மக்கள் தங்கள் ரத்தத்தையும், வியர்வையையும் கொடுத்து இருக்கிறார்.
தேஜா சஜ்ஜாவின் அனுமன் திரைப்படம் 7 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. ஜூம் உடனான ஒரு நேர்காணலில், தேஜா சஜ்ஜா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி, அதன் தொடர்ச்சி மற்றும் பலவற்றைப் பற்றி மனம் திறந்து பேசினார்.
பிரசாந்த் வர்மா இயக்கிய அறிவியல் புனை கதை சூப்பர் ஹீரோ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அவரின் எலும்புகள் உடைந்து உள்ளது. அத்துடன் வலது கண்ணின் கார்னியாவை இழந்து இருக்கிறார். அனுமனின் தொடர்ச்சி குறித்தும் அவர் பேசினார்.
அவர் கூறுகையில், “ இந்த படப்பிடிப்பின் போது காயமடைந்தேன். நான் சில எலும்புகளை உடைத்து கொண்டேன். காயங்கள் இன்னும் உள்ளன. எனது வலது கண்ணின் கார்னியா சேதமடைந்து உள்ளது. எனது கண் இப்போது சரியாக இல்லை. கண் குணமாகும் நிலையில் உள்ளது. எனது கதாபாத்திரத்திற்கு நாங்கள் ஒரு சிவப்பு லென்ஸைப் பயன்படுத்தினோம். இது எனது கார்னியாவை கீறியது.
பிறகு கண்களில் நிறைய தூசு மற்றும் கற்கள் சென்றன. மிகவும் வேதனையாக இருந்தது. நான் முழுமையாக பார்ப்பதற்கு முன்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் ஒன்று நிச்சயம்: படப்பிடிப்பின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் நேசித்தேன். மக்கள் தங்கள் ரத்தத்தையும் வியர்வையையும் கொடுப்பதைப் பற்றி பேசுகிறார்கள். நாங்கள் அதை உண்மையில் செய்தோம். அனுமன் அன்பு, வலி மற்றும் நேர்மையின் உழைப்பு.
மற்றொரு சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, தேஜா சஜ்ஜா, தானும் தயாரிப்பாளர்களும் 'ஹனுமேன் படத்தின் தொடர்ச்சியை இப்போதே திட்டமிடுகிறோம் “ என்றார். அறிவியல் புனைகதையான இதில் வரலட்சுமி சரத்குமார், அம்ரிதா ஐயர், வினய் ராய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
வர்த்தக ஆய்வாளர் மனோ பாலா விஜய பாலனின் கூற்றுப்படி, தேஜா சஜ்ஜாவின் அனுமன் படம் 7 வது நாளில் உலகளவில் ரூ.150 கோடி கிளப்பில் நுழைந்தது.
படத்தின் சமீபத்திய உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பகிர்ந்து கொண்ட மனோ பாலா வெள்ளிக்கிழமை, "ஹனுமான் வெறும் 7 நாட்கள் ஓட்டத்துடன் ரூ .150 கோடி கிளப்பில் பாணியில் நுழைகிறார். இப்படம் ரூ.200 கோடியை நோக்கி ஓடி கொண்டு இருக்கிறது. முதல் நாள் ரூ.21.35 கோடி, நாள் 2 ரூ.29.72 கோடி, நாள் 3 ரூ. 24.16 கோடி, நாள் 4 ரூ. 25.63 கோடி, நாள் 5 ரூ. 19.57 கோடி, நாள் 6 ரூ. 15.4 கோடி, நாள் 7 ரூ. 14.75 கோடி. மொத்தம் ரூ.150.58 கோடி வசூலித்து உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்