Reehana: ‘16 வயசுலேயே என் ஹார்மோன் வேலை செய்யல’ ரிஹானா ஷாக் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Reehana: ‘16 வயசுலேயே என் ஹார்மோன் வேலை செய்யல’ ரிஹானா ஷாக் பேட்டி!

Reehana: ‘16 வயசுலேயே என் ஹார்மோன் வேலை செய்யல’ ரிஹானா ஷாக் பேட்டி!

HT Tamil Desk HT Tamil
Feb 14, 2023 06:00 AM IST

‘கொஞ்சம் நல்லா இருந்தால் பார்க்கத் தான் செய்வாங்க, கேட்கத் தான் செய்வாங்க. அந்த இடத்தில் ‘எஸ் அல்லது நோ’ எது உங்கள் பதில் என்பது தான் கேள்வி’-ரிஹானா பேட்டி!

பிரபல சீரியல் நடிகை ரிஹானா
பிரபல சீரியல் நடிகை ரிஹானா (actressreehana.official Instagram)

‘‘நான் என்னுடைய தொழிலை எப்போதும் தவறாக சொன்னதில்லை. ஒரு நடிகரால் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தான் நான் வெளியே சொன்னேன். அதற்காக எனக்கு சில வாய்ப்புகள் போனது. சில நண்பர்கள் எனக்கு போன் செய்து, ‘குழந்தையோடு தனியாக இருக்கும் போது, இதையெல்லாம் பேச வேண்டாம்’ என்று அறிவுரை வழங்கினார்கள். 

என்னோட எண்ணம் அந்த நடிகரை தவறாக சித்தரிப்பது இல்லை. அவர் மீது குறை சொல்வதாக இருந்தால், நான் பாதிக்கப்பட்ட அன்றே சொல்லியிருப்பேன். வெளியில் போகும் எல்லா பெண்களுமே முள் மீது நடப்பது மாதிரி தான். கொஞ்சம் ஸ்லிப் ஆனாலும் பாதிப்பு எங்களுக்கு தான். 

இது நடிகைகளுக்கு மட்டுமல்ல, வெளியில் போகும் எல்லா பெண்களுக்கும் அந்த பாதிப்பு உள்ளது. நம்மை நாம் தான் பாதுகாப்பா வைத்துக் கொள்ளனும். யாரையும் பகைத்துக் கொள்ள கூடாது,  நான் எதிர்கொண்ட பிரச்னை, சாதாரணமாக எல்லா பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்னை தான். 

கொஞ்சம் நல்லா இருந்தால் பார்க்கத் தான் செய்வாங்க, கேட்கத் தான் செய்வாங்க. அந்த இடத்தில் ‘எஸ் அல்லது நோ’ எது உங்கள் பதில் என்பது தான் கேள்வி. அது அந்த பெண் சம்மந்தப்பட்டது; அது அவங்களோட தனிப்பட்ட விசயம், அந்த பெண்ணோட தனிப்பட்ட விசயம். தப்பு, இது சரி என்கிற இடத்தில் நான் இல்லை.

என் தொழில் எனக்கு கடவுள் மாதிரி. அதை கொச்சைப்படுத்தவோ, அசிங்கப்படுத்தவோ நான் முன்வரமாட்டேன். என்னைப் பற்றி தவறாக ப்ரொஜக்ட் ஆயிடுச்சு. சின்ன வயதில் இருந்தே, எனக்கு லவ் பண்ற விசயம் பிடிக்காது. என் தோழிகள் யாராவது லவ் பண்ணால் கூட, அவர்களை பிரித்துவிடுவேன். 

16 வயதில் இருந்த போதே எனக்கு, இந்த காலத்து பெண்கள் மாதிரி ஹார்மோன்கள் வேலை செய்யவில்லை. அதை பச்சையாகவே சொல்கிறேன். ஒரு பெண்ணுக்கு என்னவெல்லாம் உணர்வு வருமோ, அதெல்லாம் எனக்கு வரவே இல்லை. 

நல்லா சம்பாதிக்கனும், கடனை அடைக்கனும் என்கிற எண்ணம் மட்டும் தான் என்னிடம் இருந்தது. லவ் பண்ணி, ஊதாரியா சுத்துற பொண்ணு நான் கிடையாது. இப்போ இருக்கிற பொண்ணுங்கள பார்த்தால், நான் நிறைய மிஸ் பண்ணிட்டேனோனு தோணும். இப்போ பண்ற மேக்கப், அழகுப் பணிகள் எல்லாம் என் தொழில் சார்ந்தது தான். 

ஆண்களுக்கு சில சில சபல புத்திகள் இருக்கத் தான் செய்யும். அது இயற்கை. அதை மீறி அவர்களை அசிங்கப்படுத்தவோ, அவமானப்படுத்தவோ நான் விரும்பவில்லை. ஒரு நபர் செய்த தவறால், எனக்கு வாய்ப்பு தரும் எல்லா ஆண்களையும் நான் தவறாக சித்தரிக்க விரும்பவில்லை. 

நான் முன்பு அளித்த பேட்டியால், எனக்கு இரு சீரியல் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. நான் அந்த மாதிரி பெண் அல்ல, அதை விளக்க விரும்புகிறேன். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை, என் நோக்கமும் அது இல்லை. அதை விளக்க விரும்புகிறேன், என்னை யாரும் தவறாக நினைக்க வேண்டாம்,’’

என்று அந்த பேட்டியில் ரிஹானா கூறியுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.