ரீமேக் செய்து ஹிட் ஆன திரைப்படமும் அதன் கதையும்! இரு மொழிகளிலும் ஹிட் !
உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் பிரபு ஆகியோர் நடித்து கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான வசூல் ராஜா MBBS படம் இந்தியில் 2003 ஆம் ஆண்டு வெளியான முன்னா பாய் MBBS என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

உலக அளவில் சினிமா என்றாலே அதற்கு தனி மதிப்பு இருந்து வருகிறது. உலக அளவில் அதிக வருமானம் தரக்கூடிய துறைகளில் ஒன்றாகவும் சினிமாத்துறை இருந்து வருகிறது. மேலும் சினிமாவில் நுழைந்து பெரிய நடிகராக வேண்டும் என்பது பலரது கனவாகவும் இருந்து வருகிறது. இத்தகைய திரைத்துறையில் சில சமயங்களில் நல்ல கதையம்சம் இல்லாத படங்கள் வெளியாகி அதன் மதிப்பை குறைக்கின்றன. பணம் செலவு செய்து திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் ஒரு படத்தை எதிர்பார்ப்பது நியாயமான ஒன்றாகும்.
திரைத்துறையில் கதைகளுக்கு பஞ்சம் நிலவுவது உண்மையான ஒன்றாகும். குறிப்பாக இந்தியாவில் பல மொழி திரைத்துறைகள் உள்ளன. இவை அனைத்திலும் ஆண்டு ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. ஒரு மொழியில் வெற்றி அடைந்த படங்களின் கதையை எடுத்து வெவ்வேறு மொழிகளில் ரீமேக் செய்யும் கலாச்சாரம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த ரீமேக் அந்தந்த மொழிகளுக்கு ஏற்றவாறும், அதன் ரசிகர்களுக்கு ஏற்றவாரும் சில காட்சிகள் அல்லது கதையின் சில பகுதிகள் என மாற்றம் செய்யப்பறட்டு வெளியிடப்படுகின்றன.
ரீமேக் செய்து ஹிட்டான தமிழ் படங்கள்
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கதை மற்றும் திரைக்கதை சரியானதாக இருந்தால் அறிமுக ஹீரோவாக இருந்தாலும் படம் வெற்றி பெறும். இந்நிலையில் வேற்று மொழிகளில் இருந்து பல படங்கள் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. விஜய் நடித்த நண்பன், கண்டேன் காதலை, ஒஸ்தி, தாராள பிரபு, உன்னைப்போல் ஒருவன், காற்றின் மொழி போன்ற படங்கள் இந்தியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது ஹிட் ஆகி உள்ள படங்களாகும்.