ஓடிடியில் கெத்து காட்டிய தமிழ் பட வரிசை! இந்த படம் இன்னும் இருக்கா?
ஓடிடி தளங்களில் வெளியாகி டாப் வரிசையில் இருக்கும் படங்களின் வரிசையில் இடம் பெற்றுள்ள தமிழ் படங்களை இங்கு காண்போம்

திரையரங்குகளில் வெளியாகி வெற்றி அடைந்த படங்கள் ஓடிடியிலும் வெளியாகி பட்டையை கிளப்புவது வழக்கமாகி விட்டது. குறிப்பாக கரோனா காலகட்டத்திற்கு பின்னர் ரசிகர்கள் இடையே ஓடிடியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏனெனில் வீடுகளில் இருந்தே விரும்பிய படங்களை தெளிவான ஹெச்டி தரத்தில் பார்ப்பதையே மக்களும் விரும்புகின்றனர். இருப்பினும் இன்றும் திரையரங்குகளின் மவுசு குறையவில்லை. ரசிகர்களுடன் ரசிகர்களாக விசில் சத்தத்துடனும், கூச்சலுடனும் படம் பார்ப்பதையே பெரும்பான்மையான பார்வையாளர்கள் விரும்புகின்றனர். ஓடிடி போன்ற தொழிநுட்பங்களால் வீட்டிலே இருந்து வெளியே வர இயலாதவர்களும் எளிமையாக பார்க்கலாம். ஓடிடி தளங்களில் வெளியாகி டாப் வரிசையில் இருக்கும் படங்களின் வரிசையில் இடம் பெற்றுள்ள தமிழ் படங்களை இங்கு காண்போம்
நெட்பிளிக்ஸ்
உலக அளவிலான பல மொழித் திரைப்படம் வெளியாகும் தளமாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் உள்ளது. இத்தளத்தில் வெளியிடப்படும் படங்கள் உலகின் அனைத்து மூலைகளில் உள்ள மக்களையும் எளிமையாக சென்றடைகிறது. இந்தியாவிலும் நெட்பிளிக்ஸ் தளத்திற்கு சிறந்த வரவேற்பு இருந்து வருகிறது. இந்த தளத்தில் இந்திய அளவில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டடு வரும் படங்கள் வரிசைப் படுத்தப்படுகின்றன. அதில் இடம் பெற்றிருக்கும் படங்களில் தமிழ் படங்களும் உள்ளன.
நடிகர் விஜயின் லியோ முதன்மையான இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கிய மகாராஜா திரைப்படம் கடந்த சில வாரங்களாகவே நெட்பிளிக்ஸ் தளத்தின் டாப் படங்களின் வரிசையில் இடம் பிடித்து வருகிறது. மேலும் கடந்த அக்டோபர் 3 அன்று நெட்பிளிக்ஸ் இல் வெளியான ‘தி கோட்’ திரைப்படம் இந்திய அளவிலான பட வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் இப்படத்தின் திரையரங்கு வசூல் மட்டுமே 500 கோடியை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதுவும் தொடர்ந்து நெட்பிளிக்ஸில் டாப் வரிசையில் இருந்து வருகிறது.