பேரன்புக்கு சொந்தக்காரன் இயக்குநர் ராம் பிறந்தநாள்!கற்றது தமிழ் முதல் கடந்து வந்த பாதை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பேரன்புக்கு சொந்தக்காரன் இயக்குநர் ராம் பிறந்தநாள்!கற்றது தமிழ் முதல் கடந்து வந்த பாதை!

பேரன்புக்கு சொந்தக்காரன் இயக்குநர் ராம் பிறந்தநாள்!கற்றது தமிழ் முதல் கடந்து வந்த பாதை!

Suguna Devi P HT Tamil
Oct 11, 2024 03:42 PM IST

இவர் இயக்கியது மொத்தமே 4 படங்கள் தான். ஆனால் கோபமாக, பாசமாக என தன் உள்ளத்தின் உணர்வுகளை அப்படியே படங்களின் வழியாக பிரதிபலிப்பதில் வல்லவர்.

பேரன்புக்கு சொந்தக்காரன் இயக்குநர் ராம் பிறந்தநாள்!கற்றது தமிழ் முதல் கடந்து வந்த பாதை!
பேரன்புக்கு சொந்தக்காரன் இயக்குநர் ராம் பிறந்தநாள்!கற்றது தமிழ் முதல் கடந்து வந்த பாதை!

பாலுமகேந்திராவின் பட்டறை 

ஒளிப்பதிவாளராக இருந்த பின் சிறந்த இயக்குநராக தமிழ் திரையுலகில் ஜொலித்தவரான பாலு மகேந்திராவை தன் குருவாக ஏற்றுக்கொண்டவர் இயக்குநர் ராம். பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவில் ஒரு படத்தை இயக்க முயற்ச்சித்தார். ஆனால் அது கைகூட வில்லை. பின் பல திரை தொழில்நுட்பங்களை அவரிடம் இருந்தே ரம் கற்றுக்கொண்டார். பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து தமிழ் திரையுலக்கிற்கு கிடைத்த மற்றுமொரு முத்து தான் இவர். 

நான்கே படங்கள் 

இயக்குநர் ராம் மொத்தமாக கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி மற்றும் பேரன்பு என்ற நான்கே படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். தற்போது நடிகர் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கி வருகிறார். கற்றது தமிழ் படத்தின் வாயிலாக ஒரு இளைஞனின் சமூகம் மீதான கோபத்தை, இயலாமையை இந்த சமூகத்தால் அவன் அடைந்த மனத்தாக்கத்தை மிகவும் காட்டமாக காட்டியிருந்தார். மேலும் இந்த படத்தில் நடித்த ஜீவா எம். ஏ தமிழ் படித்ததாக காண்பிக்கப்படுகிறார். இயக்குநர் ராமும் எம். ஏ தமிழ் படித்தது குறிப்பிடத்தக்கது. 

தங்கமீன்கள் வாயிலாக ஒரு அப்பா மகளின் உறவை மிகவும் யதார்த்தமான காட்சிகளாக ஆழமாக மனதில் பதிய வைத்திருந்தார். பின்னர் தரமணி படத்தில் ஒரு தனி பெண்ணாக இருக்கும் தாயின் வாழ்வியலையும், அவளது காதல், பரிவு, ஏமாற்றம், தைரியம் என எல்லா உணர்வுகளையும் பார்வையாளனுக்குள் கடத்தி இருப்பார். பேரன்பு என்ற காவியத்தின் வாயிலாக இந்த உலகம் எல்லாவருக்கும் ஆனது என காட்டியிருப்பார். 

நடிகரான ராம் 

இயக்கத்தில் கைதேர்ந்த ராம் நடிப்பையும் விட்டு வைக்கவில்லை. தங்கமீன்கள் இவரது நடிப்பிற்கு அவரே தீனி போட்டுக்கொண்ட படம் ஆகும். அதன் பின்னர் சைக்கோ, சவரக்கத்தி என அவரது நடிப்பின் வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தியிருப்பார்.  தங்கமீன்கள் படத்தில் வரும் “காக்கைக்கும் தன் குஞ்சு போன் குஞ்சுன்னு காக்கா வந்து உங்க கிட்ட சொல்லுச்சா மிஸ்”  என பேசும் ஒரு காட்சி போது அவரது நடிப்பின் திறமையை அறிய. 

ராம் இயக்கிய அனைத்து படங்களிலும் அறம் எனும் பண்பு நிறைந்திருக்கும். இவரது தரமணி படத்தில் நடுவே இவரது குரலில் வரும் விளக்கங்கள் நம்முடன் படத்தின் வாயிலாக பேசுவது போல அமைந்திருக்கும். உணர்வுகளை எளிமையாக பார்வையாளனுக்கு கடத்துவதில் ராம் மகா கில்லாடி. ஒரு கதாபாத்திரம் அடையும் கோபத்தை, மோகத்தை, குற்ற உணர்வை, சோகத்தை, மகிழ்ச்சியை என எளிமையாக கடத்தி விடுவார். இத்தனை திறமை மிக்க இயக்குநர் ராம் அவர்களுக்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.