HBD Suriya: தடைகளை உடைத்த சூரியா.. தனக்கான நாயகனை உருவாக்கிய தமிழ் சினிமா..நடிகர் சூர்யா பிறந்த நாள்
HBD Suriya: நடிகர் சூரியா, நடிகர் சூர்யா பிறந்த நாள், சூரியா பிறந்த நாள், தமிழ் சினிமா, சினிமா செய்திகள், சிவக்குமார்

HBD Suriya: எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று கூறி ஆசை படத்தில் நடிக்க மறுத்த அதே சூர்யாதான், தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரமா சூர்யா சரியாக வருவார் என்று நம்பிக்கையூட்டினார். நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், ஆயுத எழுத்து, கஜினி, ஏழாம் அறிவு, ஜில்லுன்னு ஒரு காதல், சூரரைபோற்று, ஜெய்பீம் வரை அடித்து ஆடும் நடிகர் சூர்யா பிறந்த தினம் இன்று
பிறப்பு
நடிகர் சிவக்குமார்- லட்சுமி குமாரி தம்பதிக்கு மகனாக 1975ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி பிறந்தார். இவரது தம்பி நடிகர் கார்த்தி. தங்கை பாடகி பிருந்தா. இவர் தன் உடன் நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தியா, தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தொழில் ஆசை
நடிகர் சூர்யாவின் இயற்பெயர் சரவணன். இவர் ஆரம்ப நாட்களில் பிஸ்சஸ் மேனாக வலம் வர விரும்பி லயோலா கல்லூரியில் பி.காம் பயின்றார். படித்து முடித்த உடன் கார்மெண்ட்ஸில் 8 ஆயிரம் சம்பளத்திற்கு பணியாற்றினார். இதற்கிடையில் இயக்குநர் வசந்த தான் இயக்கிய ஆசை திரைப்படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் நடிக்க ஆசை இல்லை என்று மறுத்து விட்டார். இதையடுத்து மணிரத்னம் ஒரு போட்டோ ஷூட் செய்ய அவரது அடுத்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் சூர்யா.