வாழ்நாள் முழுக்க ஓகே: ஏன் இப்படி சொல்கிறார் டாப்சி?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வாழ்நாள் முழுக்க ஓகே: ஏன் இப்படி சொல்கிறார் டாப்சி?

வாழ்நாள் முழுக்க ஓகே: ஏன் இப்படி சொல்கிறார் டாப்சி?

Aarth V HT Tamil
Feb 18, 2022 11:40 AM IST

நடிகை டாப்சி வாய்ப்பு கிடைத்தால் எந்தவிதமான கதாபாத்திரங்களில் வாழ்நாள் முழுவதும் நடிக்க ஒப்புக்கொள்வேன் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

<p>டாப்சி</p>
<p>டாப்சி</p>

இவர் தான் ஒரு தீவிரமான மார்வெல் வெறியர் என்பதை அடிக்கடிசமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் டாப்சி சமீபத்தில் ஃபிலிம் கம்பானியனுக்கு பேட்டி அளித்து உள்ளார். அப்போது அவரிடம் உங்கள் வாழ்நாள் முழுவதும் எந்த வகைப் படங்களில் நடிக்க விருப்பம் என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த டாப்சி, "மார்வெலின் அவெஞ்சர் தொடரில் என்னை நடிக்க அணுகினால் மட்டுமே அது போன்ற விஷயம் நடக்கும். அதுதான் ஒரே ஒரு வழி. என் வாழ்நாள் முழுவதும் ஒரு விதமான திரைப்படத்தில் என்னை நடிக்கவைக்க அதற்கு மட்டுமே சக்தி உள்ளது" என்றார்.

முன்னதாக டாப்ஸி பண்ணு, விக்ராந்த் மாஸ்ஸியுடன் நடித்த ஹசீன் தில்ருபா திரைப்படத்தின் வெளியீட்டு விளம்பர வீடியோவில் கூட, மார்வெல் மீதான ஈர்ப்பை வெளிக்காட்டியிருந்தார்.

அவரிடம் சமூக வலைதளங்களில் உங்களைப் பின்தொடராத யாருக்காவது குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்களா என கேள்வி கேட்டனர். அதற்கு அவர், "நான் ராபர்ட் டவுனி ஜூனியரூக்கு ஒருமுறை செய்தி அனுப்பினேன். ஆனால் அவர் எனக்கு எந்த பதிலும் தரவில்லை" என மிகவும் வருதமாக கூறினார்.

ஆடுகளம் திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை டாப்சி கடைசியாக தமிழில் அனபெல் சேதுபதி படத்தில் நடித்திருந்தார். திரையுலகில் 10 ஆண்டுகளாக நடித்து வந் டாப்சி தற்போது புதிதாகப் படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

'அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்' என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் த்ரில்லர் படம் ஒன்றை தயாரித்து, நடிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார். 
 

நடிகை டாப்சி நடிப்பில் பிப்ரவரி 4 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான லூப் லாபேடா படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது 1998 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெர்மன் திரைப்படமான, லோலா ரன் படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.