தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mtv Spiltsvilla X5: கிசுகிசு பேசுறதுல பெண்களை அடிச்சிக்க முடியாது..! பற்ற வைத்த உர்ஃபி ஜாவேத் - சன்னி லியோன் அட்வைஸ்

MTV Spiltsvilla X5: கிசுகிசு பேசுறதுல பெண்களை அடிச்சிக்க முடியாது..! பற்ற வைத்த உர்ஃபி ஜாவேத் - சன்னி லியோன் அட்வைஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 18, 2024 09:50 PM IST

போட்டியாளர்கள் மத்தியில் டீயை குடி கிசுகிசு பேசு பேட்டியை உர்ஃபி ஜாவேத் ஆரம்பித்து வைத்ததோடு, கிசுகிசு பேசுறதுல பெண்களை அடிச்சிக்க முடியாது எனவும் பற்றி வைத்தார். பெண்களை, பெண்களே கீழே பிடித்து தள்ளும் வேலையை செய்யக் கூடாது என சன்னி லியோன் அட்வைஸ் மழை பொழிந்தார்.

கிசுகிசு பேசுறதுல பெண்களை அடிச்சிக்க முடியாது என பற்ற வைத்த உர்ஃபி ஜாவேத், சன்னி லியோன் அட்வைஸ்
கிசுகிசு பேசுறதுல பெண்களை அடிச்சிக்க முடியாது என பற்ற வைத்த உர்ஃபி ஜாவேத், சன்னி லியோன் அட்வைஸ்

வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 7 மணிக்கு இந்த டேட்டிங் நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம். தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை ஏகப்பட்ட இளைஞர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

இதயங்களின் ராணி என்ற அழைக்கப்படும் சன்னி லியோன் மற்றும் இதய ராஜா என்ற அழைக்கப்படும் தனுஜ் விர்வானி தொகுத்து வழங்கும் இந்த ஷோவில் கார சார மசாலாவை சேர்க்க மிஸ்சீஃப் மேக்கராக உர்ஃபி ஜாவேத் போட்டியாளர்களுக்கு அடிக்கடி சவாலான போட்டிகளை கொடுத்து காதலர்களுக்கு இடையே கலாட்டாவை ஏற்படுத்தி நிகழ்ச்சியை சூடு பறக்க செய்து வருகிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

கிசுகிசு பேச்சு போட்டி

இந்த வாரம் டீயை குடி கிசுகிசு பேசு என்கிற போட்டியை உர்ஃபி ஜாவேத் ஆரம்பித்து வைக்க, காஷீஷ் மற்றும் டீகிலா பற்றி சக பெண் போட்டியாளர்களே இஷ்டத்துக்கு கிசுகிசு பேசத் தொடங்கி விட்டனர். 'Chai Pe Charcha' எனும் அந்த போட்டியை உர்ஃபி ஜாவேத் ஸ்ப்ளிட்ஸ் வில்லா போட்டியாளர்கள் மத்தியில் தொடங்கி வைக்க வில்லாவே இரண்டாகி விட்டது.

சன்னி லியோன் அட்வைஸ்

ஒரு கட்டத்தில் கிசுகிசுக்கள் பெர்சனல் அட்டாக்காகவும், பெண் போட்டியாளர்களின் மாண்பையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் சென்றதும். அதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சன்னி லியோன் உடனே உள்ளே புகுந்து இப்படி பெண்களே பெண்களை பற்றி தேவையில்லாத காசிப்களை பேசி அசிங்கப்படுத்தக் கூடாது என்றும் ஒருவரை முயற்சி செய்து மேலே கொண்டு வரத்தான் பார்க்க வேண்டும்.

பெண்களை, பெண்களே கீழே பிடித்து தள்ளும் வேலையை செய்யக் கூடாது. இந்த உலகத்தில் பெண்கள் தான் பல தொழில்களில் பல துறைகளில் ஆட்சி செய்து வருகிறார்கள். ஆனால், பெண்ணுக்கு எதிரி பல இடங்களில் பெண்களாகவே இருப்பது தான் மிகவும் மோசமான விஷயம் என அறிவுரை வழங்கினார்.

சன்னி லியோன் கொடுத்த அட்வைஸ் போட்டியாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஆனால், உர்ஃபி ஜாவேத் கொளுத்திப் போட்ட கிசுகிசு டாஸ்க் காரணமாக டீகிலா உச்சகட்ட கோபத்துக்கு ஆளாகி விட்டார். மேலும், காஷிஷ் தன்னை பற்றி மோசமான வதந்திகளை பரப்பியது யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கியுள்ளார். இன்னொரு பக்கம் ஆரக்கிள் ஹர்ஷ் மற்றும் நயேராவை ஐடியல் மேட்ச் இல்லை என சொல்லி விட அவர்களும் அப்செட் ஆகி விட்டனர்.

இந்த வார எபிசோடு ரொம்பவே சூடு பிடிக்க காரணம் அந்த டீ டாஸ்க் தான். ஆரம்பத்தில் சாதாரண டீ தானே என நினைத்த போட்டியாளர்களுக்கு கடைசியில் பெரிய பல்பு காத்திருந்தது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எம்டிவி மற்றும் ஜியோ சினிமா தமிழில் இந்த ரியாலிட்டி ஷோ இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்