தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sunny Leone: காதல் என்பது 50 - 50! லவ் குருவாக மாறிய சன்னி லியோன் - காதல் புரிதல் குறித்து அட்வைஸ் மழை

Sunny Leone: காதல் என்பது 50 - 50! லவ் குருவாக மாறிய சன்னி லியோன் - காதல் புரிதல் குறித்து அட்வைஸ் மழை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 13, 2024 11:00 PM IST

எம் டிவி ஸ்ப்ளிட்ஸ் வில்லா எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் சீசன் 15 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகை சன்னி லியோன் திடீரென லவ் குருவாக மாறி காதல் குறித்த புரிதலை அட்வைஸ் மழையாக போட்டியாளர்கள் மத்தியில் வெளிப்படுத்தினார்.

எம் டிவி ஸ்ப்ளிட்ஸ் வில்லா நிகழ்ச்சியில் லவ் குருவாக மாறிய சன்னி லியோன்
எம் டிவி ஸ்ப்ளிட்ஸ் வில்லா நிகழ்ச்சியில் லவ் குருவாக மாறிய சன்னி லியோன்

காதல் குகைக்குள் நடந்த திருப்பம்

தனியாக காதல் குகைக்குள் ஹர்ஷை மட்டும் அனுப்பியிருந்தனர். அங்கே திடீரென வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த முன்னாள் காதலி சுபியை பார்த்ததும் கட்டிப் பிடித்து உணர்ச்சி வசப்பட்டார் ஹர்ஷ். அதன் பின்னர் தற்போது தான் ருஷாலியை காதலித்து வருவதாக சுபியிடம் கூறி அவரை தவிர்த்தார். விஷயம் இப்படியிருக்க, காதல் குகைக்குள் வைத்து ஹர்ஷ் அழகாக சுபியை கட்டிப் பிடித்த காட்சிகளை மட்டும் வெளியிட, அதை பார்த்த ருஷாலி பத்ரகாளியாக மாறினார்.

இதெல்லாம் என்ன? எப்படி எனக்கு துரோகம் செய்ய உனக்கு மனம் வந்தது என கடுப்பாகி கத்த ஆரம்பித்து விட்டார் ருஷாலி. அவருக்கு துணையாக காஷிஷ் நின்று ஹர்ஷ் செய்தது அநியாயம் என வாதிட்டார். ஹர்ஷுக்கு ஒரே ஒரு உறுதுணையாக சச்சின் மட்டுமே அவர் பக்கம் நின்றார்.

ட்ரெண்டிங் செய்திகள்

சுபி உள்ளே வந்ததில் இருந்தே ஹர்ஷ் எங்கே அவர் பக்கம் தாவி விடுவாரோ என்கிற பயத்துடனே இருந்த ருஷாலிக்கு, சுபியுடன் லவ் டென்னில் ஹர்ஷ் கட்டிப் பிடித்து இருந்ததை பார்த்து கடுப்பாகி விட்டார்.

உர்ஃபி ஜாவேத் நினைத்தது போல தனது வேலையை காட்ட, வில்லாவே ரெண்டாகி விட்டது. ஹர்ஷ் தனக்கும் சுபிக்கும் நடந்த பேச்சுவார்த்தை குறித்தும், தான் ருஷாலியை தான் உண்மையாக காதலிக்கிறேன் என சொல்ல எவ்வளவு போராடியும் எதுவும் வொர்க்கவுட் ஆகவில்லை.

இன்னொரு புறம் சிவெட் செய்யும் காரியங்களால் கடுப்பாகி அனிகா அப்செட் ஆகிவிட்டார். அதே நேரத்தில் ஜஷ்வந்த் உடன் அக்ரிதி கடுமையான சண்டை போட காதல் பொங்கி வழிகிற ஸ்ப்ளிட்ஸ் வில்லா சண்டைக்காடாக மாறின.

போட்டியாளர் சச்சின் டபுள் கேம்

இதற்கு நடுவே ஆதிக் மற்றும் கானக் இருவரும் ஒன்றாக இணைந்ததை நடிகை சன்னி லியோன் நோட் செய்தார். சச்சின் எப்படி டபுள் கேம் ஆடுகிறார் என இஷிதா தோலுரித்துக் காட்டத் தொடங்கினார். சச்சினோட எக்ஸ் ஸ்குயிஸான ஸ்வாஸ்திகாவுடன் அவர் பழகிக் கொண்டே தன்னை காதலிப்பது போல நாடகம் ஆடுகிறார் என்பதை அம்பலப்படுத்தினார்.

வெற்றி ஜோடியான அர்பாஸ் கான் மற்றும் காஷிஷுக்கு புதிய போட்டி ஒன்று வைக்கப்பட்டது. அந்த போட்டியில் ஏகப்பட்ட தடைகளும் ட்விஸ்ட்டுகளும் கொடுக்கப்பட்டன. 'Long Ride Pe Chal,' எனும் அந்த போட்டியில் இருவரும் எதிர் எதிர் அணியில் மோதினர்.

அர்பாஸ், நயேரா மற்றும் ஹர்ஷ் மூவரும் அந்த போட்டியில் வெற்றிப் பெற்றனர். சிவெட்டின் அணி மோசமாக விளையாடி தோல்வியை தழுவிய நிலையில், தங்கள் தோல்விக்கு அர்பாஸ் தான் காரணம் என சிவெட் மற்றும் அர்பாஸ் இடையே திடீரென மோதலும் வெடித்தது.

ஆட்டத்தின் அடுத்த கட்டமான டோம் செஷனில் ஆரக்கிளை எந்த ஜோடி சந்தித்து சிறந்த ஜோடியாக தேர்வாகிறது என்று பார்க்கும் கட்டம் வந்தது. ஹர்ஷ் எப்படியாவது சிறந்த ஜோடியாக தன்னையும் ருஷாலியையும் நிரூபிக்க போராடினார். ஆனால், அது நிறைவேறவில்லை.

காதல் குறித்து சன்னி லியோன்

சன்னி லியோன் பேசும் போது காதல் என்பது 50 - 50 ஆக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அது காதல் இல்லை. நானும் என் கணவரும் அப்படித்தான் வாழ்க்கையை நடத்தி வருகிறோம் என்றார்.

இறுதியில் சிறந்த ஜோடியாக இந்த வாரம் நயேரா மற்றும் திக் விஜய் தேர்வானார்கள். ரூரு மற்றும் அமேஹா ஜோடியினர் இந்த வாரம் எலிமினேட் ஆகி அனைவருக்கும் பிரியா விடை சொல்லி விட்டு வெளியேறினர்.

முதல் பாதி நிறைவு

ஸ்ப்ளிட்ஸ் வில்லா சீசன் 15 முதல் பாதியை வெற்றிகரமாக முடித்துள்ளது என்றும், இனிமேல் தான் ரியல் ஆட்டமே ஆரம்பம் என ஸ்பிளிட்ஸ் வில்லா போட்டியாளர்களை எச்சரிக்கும் தொனியில் தனுஜ் பேசினார்.

பயங்கரமான போட்டிகளும், ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளும் அரங்கேறப் போவதாகவும் போட்டியாளர்கள் அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எம் டிவி தமிழ் மற்றும் ஜியோ சினிமா ஓடிடியில் தமிழில் இந்த ரியாலிட்டி ஷோ இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்