Kayal Serial: ‘பச்சையாக பேசிய கெளதம்.. வெளுவெளுவென வெளுத்த வாங்கிய டீன்.. சவால் விட்ட கயல்! - கயல் சீரியலில் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: ‘பச்சையாக பேசிய கெளதம்.. வெளுவெளுவென வெளுத்த வாங்கிய டீன்.. சவால் விட்ட கயல்! - கயல் சீரியலில் இன்று!

Kayal Serial: ‘பச்சையாக பேசிய கெளதம்.. வெளுவெளுவென வெளுத்த வாங்கிய டீன்.. சவால் விட்ட கயல்! - கயல் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Published Aug 07, 2024 09:34 AM IST

Kayal Serial: உனக்கு கல்யாணம் ஆனாலும், உன் மீது எனக்கு ஒரு கண் இருந்து கொண்டே தான் இருக்கும் என்று பச்சையாக பேசினான். ஆனால், கயல் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றாள். - கயல் சீரியலில் இன்று!

Kayal Serial: ‘பச்சையாக பேசிய கெளதம்.. வெளுவெளுவென வெளுத்த வாங்கிய டீன்.. சவால் விட்ட கயல்! -  கயல் சீரியலில் இன்று!
Kayal Serial: ‘பச்சையாக பேசிய கெளதம்.. வெளுவெளுவென வெளுத்த வாங்கிய டீன்.. சவால் விட்ட கயல்! - கயல் சீரியலில் இன்று!

இதற்கிடையே மூர்த்தி ராஜலட்சுமி வீட்டிற்கு சென்று அவமானப்பட்டது தெரிந்து விட்டது. இந்த நிலையில் கோபமாக மூர்த்தியை நோக்கி வந்த கயல், உன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்…பத்திரிக்கை கொடுக்கிறேன் என்று சொல்லி, ராஜலட்சுமி வீட்டிற்கு சென்று அவமானப்பட்டு வந்திருக்கிறாய் என்று கூற அத்துடன் புரமோ முடிவடைகிறது.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

தர்மலிக்கத்தின் பேச்சைக் கேட்டு மூர்த்தியும், தனமும் ராஜலட்சுமியை சந்தித்து, கயல் கல்யாணத்திற்கான முதல் பத்திரிக்கையை கொடுக்க சென்றனர். அவர்களைப் பார்த்த உடனே ஆக்ரோஷமான ராஜலட்சுமி நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் என்று திட்டி, சரமாரியாக சாடினார். ஆனால் மூர்த்தி நிதானமாக நடந்து கொண்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தான். தொடர்ந்து எங்களுக்கு சொந்தம் விட்டுப் போகக்கூடாது என்று கூறிய அவன், முதல் பத்திரிகையை வாங்கிக்கொண்டு நிச்சயம் நீங்கள் கல்யாணத்திற்கு வர வேண்டும் என்று ராஜலட்சுமியைக்கேட்டான்.

இதையடுத்து இன்னும் கோபமான ராஜலட்சுமி கோபத்தில் கன்னா பின்னாவென்று வார்த்தைகளை விட்டார். ஆனாலும் மூர்த்தி நிதானமாக அவரிடம் பேசி, கல்யாணத்திற்கு வர வைக்க முயன்றான். இதற்கிடையே மாடியில் இருந்து கீழே வந்து கொண்டிருந்த மனோஜ், மூர்த்தி தனம் வந்திருப்பதை பார்த்து விட்டான். பார்த்த மாத்திரத்திலேயே ஓடி வந்தவன், உன்னுடைய தங்கை என்னை ஜெயில் வைப்பாள். எங்களுடைய குடும்பம் உங்கள் கல்யாணத்திற்கு வர வேண்டுமா என்று கடுமையாக சாடினான்.

மனோஜை மூர்த்தி சமாதானம் செய்து கொண்டிருக்கும் போதே, கோபமான மனோஜ் தாம்பூல தட்டை தட்டி விட்டதோடு, பத்திரிகையையும் காலின் கீழே போட்டு மிதித்தான். அப்போதும் பொறுமையாக இருந்த மூர்த்தி, அவன் காலில் கீழே இருந்த பத்திரிகையை கையை கொண்டு எடுக்க முயற்சி செய்தான். மேலும் அவன், தயவு செய்து காலை எடு, இது என்னுடைய தங்கை வாழ்க்கை என்று கெஞ்சினான். ஆனாலும் மனோஜ் மனமிறங்க வில்லை. தொடர்ந்து அவன் கண்ணா பின்னாவென்று வார்த்தைகளை விட, ஒரு கட்டத்தில் மூர்த்திக்கு கோபம் வந்துவிட்டது.

அமைதியாக நின்ற ராஜலட்சுமி

இதையடுத்து அவன் மனோஜை அடிக்க பாய்ந்து விட்டான். இந்த நிலையில் குறுக்கே வந்த ராஜலட்சுமி என் வீட்டிற்குள் வந்து என் மகனையே அடிக்கிறாயா என்று மூர்த்தியை அடிக்க கை ஓங்கினாள். அந்த இடத்தில் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றது. இதையடுத்து நிதானமாக பேசிய மூர்த்தி, அத்தை… நீங்களே சொல்லுங்கள். மனோஜ் நடந்து கொண்டது சரியா.. மனோஜ் காரை கொண்டு ஒருவரை ஏற்றி, அவன் காலை உடைத்திருக்கிறான். அடிபட்டவனை மருத்துவமனையில் அனுமதித்து, அதற்கான சிகிச்சையையும், என்னுடைய தங்கை கயல் கொடுத்திருக்கிறாள். உங்கள் மகன் தவறு செய்ததற்கு போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறாள். இது எந்த விதத்தில் அநியாயம் ஆகும் என்று நியாயமாக கேட்டான்.

ஆனால் ராஜலட்சுமி எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றாள். இதற்கிடையே கொந்தளித்த மனோஜ் கயல் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பேச டென்ஷனான மூர்த்தி, அவனிடம் சண்டைக்கு பாய்ந்தான். ஒரு கட்டத்தில் மனோஜ் உன்னுடைய தங்கை கயல் கழுத்தில் தாலி ஏறாது, ஏறினாலும் நிலைக்காது என்று சொல்ல, கோபத்தின் உச்சிக்கு சென்ற மூர்த்தி அவனிடம் அடித்து புரண்டு சண்டையிட்டான். ஆனால் மனோஜ் மூர்த்தியை அடித்து வெளியே தள்ளி விட்டான். இதையடுத்து மூர்த்தி தன்னுடைய மனைவியான தனமிடம், ஏன் மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று சொல்லி வருத்தம் அடைந்தான்.

இன்னொரு பக்கம் கெளதம் டாக்டர் கயல் பணி நேரத்தில் அழுது கொண்டிருந்ததை டீனிடம்போட்டுக் கொடுக்க, கயலை அழைத்த டீன், நீங்கள் உங்களது அம்மா மருத்துவமனையில் இருக்கும் பொழுது கூட, அவ்வளவு சின்சியராக வேலை பார்த்தீர்கள்;இப்போது இப்படி ஏன் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறீர்கள். எங்கே போனாள் அந்த பழைய கயல் என்று சொல்லி கடுமையாக கண்டித்தார்.

இதையடுத்து கயல் இனி நான் ஒழுங்காக வேலை செய்கிறேன் என்று அவரை சமாதானம் செய்தார். இந்த நிலையில் வெளியே வந்த கயலிடம், டாக்டர் கௌதம், போலீசை கூப்பிட்டு வந்து, என்னையே அடிக்க வைக்கிறாயா? இன்று என்னுடைய பவரை காண்பித்தேன் பார்த்தாயா? உனக்கு கல்யாணம் ஆனாலும், உன் மீது எனக்கு ஒரு கண் இருந்து கொண்டே தான் இருக்கும் என்று பச்சையாக பேசினான். ஆனால், கயல் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றாள். இறுதியாக கௌதம், உனக்கு எழிலுடன் கல்யாணம் நடக்க இருக்கிறது இல்லையா அது நடக்குமா? என்று கேட்க, அதைக் கேட்ட கயல் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.