Marumagal Serial: சிவபிரகாசம் வைத்த சீனி வெடி; அணுகுண்டாய் வெடித்த மனோகரி;பந்தாடும் பத்திரம்! - மருமகள் சீரியலில் இன்று!-sun tv marumagal serial today promo episode on september 04 2024 indicates prabhu aathirai ready to seperation - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marumagal Serial: சிவபிரகாசம் வைத்த சீனி வெடி; அணுகுண்டாய் வெடித்த மனோகரி;பந்தாடும் பத்திரம்! - மருமகள் சீரியலில் இன்று!

Marumagal Serial: சிவபிரகாசம் வைத்த சீனி வெடி; அணுகுண்டாய் வெடித்த மனோகரி;பந்தாடும் பத்திரம்! - மருமகள் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 04, 2024 10:02 AM IST

Marumagal Serial: அவளுடைய பிள்ளைகள் அவளிடம் சண்டைக்குச் செல்ல, மனோகரி கையை நீட்டி மகளை அடித்து விட்டாள். இதைப்பார்த்த ஆதிரை தனக்கு கல்யாணமே வேண்டாம் என்று கூறிவிட்டாள். - மருமகள் சீரியலில் இன்று!

Marumagal Serial: சிவபிரகாசம் வைத்த சீனி வெடி; அணுகுண்டாய் வெடித்த மனோகரி;பந்தாடும் பத்திரம்! - மருமகள் சீரியலில் இன்று!
Marumagal Serial: சிவபிரகாசம் வைத்த சீனி வெடி; அணுகுண்டாய் வெடித்த மனோகரி;பந்தாடும் பத்திரம்! - மருமகள் சீரியலில் இன்று!

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

மருமகள் சீரியலின் நேற்றைய எபிசோடில், சிவப்பிரகாசம் கல்யாணத்தை ஆடம்பரமாக, லட்சங்களை செலவழித்து, நடத்த வேண்டும் என்று கூறிவிட்டு சென்ற நிலையில், அதை நினைத்து மயங்கினான் பிரபு. இதையடுத்து அனைவரும் தண்ணீர் தெளித்து அவனை எழுப்பினார்கள். இதையடுத்து எழுந்த அவன், எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம். கல்யாணத்திற்காக அவ்வளவு ரூபாயெல்லாம் செலவழிக்க முடியாது என்றான்.

இன்னொரு பக்கம், சிவப்பிரகாசம் ஆதிரையிடம் கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்துவதற்கு மனோகரிடம் நில பத்திரத்தை வாங்க வேண்டும் என்றும் அதற்கு அவள் அவ்வளவு சீக்கிரத்தில் சம்மதிக்க மாட்டாள் என்றும் கூறினார். இதையடுத்து ஆதிரை, நிச்சயமாக என்னுடைய கல்யாணம் என்றால், அதற்காக மனோகரி அம்மா பத்திரத்தை தருவார் என்று நம்பிக்கையோடு கூறினாள்.

பிடிவாதமாக நின்ற மனோகரி

இதையடுத்து ஆதிரையும் சிவப்பிரகாசமும் மனோகரியிடம் சென்று, கல்யாண விஷயத்தை கூறி, பத்திரத்தை கேட்டார்கள். ஆனால், மனோகரியோ பத்திரத்தை கொடுக்கவே முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டாள். இதையடுத்துப் பேசிய சிவப்பிரகாசம், ஆதிரைக்கும் நீ அம்மாவாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் உன் அக்கா உன்னை எனக்கு கல்யாணம் செய்து வைத்தாள்.

ஆனால் நீயே இப்போது ஆதிரையின் கல்யாணத்திற்கு தடங்கலாக நிற்கிறாயே என்று கேட்க, பதிலடி கொடுத்த மனோகரி, எப்படி என்னுடைய அக்கா, அவளின் வாழ்க்கையை எனக்கு கொடுத்து விட்டு சென்றாலோ, அதேபோல அவளின் நிலமும் எனக்குத்தான் சொந்தம் என்றாள். இதையடுத்து கோபத்தின் உச்சிக்கு சென்ற சிவப்பிரகாசம் மனோகரியை அடிக்கச் சென்றார்.

மேலும், மாலை 5 மணி வரை உனக்கு நேரம் கொடுக்கிறேன். அதற்குள் நீ பத்திரத்தை கொடுக்க வேண்டும், இல்லை என்றால் நீ மோசமான சிவப்பிரகாசத்தை பார்க்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து சென்றார். இதனையடுத்து அவளுடைய பிள்ளைகள் அவளிடம் சண்டைக்குச் செல்ல, மனோகரி கையை நீட்டி மகளை அடித்து விட்டாள். இதைப்பார்த்த ஆதிரை தனக்கு கல்யாணமே வேண்டாம் என்று கூறிவிட்டாள். இதனையடுத்து மனோகரி பத்திரத்தை கொடுக்க சம்மதித்தாள். அத்துடன் நேற்றைய எபிசோடி நிறைவடைந்தது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.