Marumagal serial: ‘உள்ளே வரும் ஆதிரையின் அம்மா.. கண்ணீர் கடலில் சிவப்பிரகாசம்’ - மருமகள் சீரியலில் இன்று!-sun tv marumagal serial today latest episode promo on august 29 th and 2024 sivaprakasam gives aathirai mom diary to her - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marumagal Serial: ‘உள்ளே வரும் ஆதிரையின் அம்மா.. கண்ணீர் கடலில் சிவப்பிரகாசம்’ - மருமகள் சீரியலில் இன்று!

Marumagal serial: ‘உள்ளே வரும் ஆதிரையின் அம்மா.. கண்ணீர் கடலில் சிவப்பிரகாசம்’ - மருமகள் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 29, 2024 01:37 PM IST

Marumagal serial: மற்றொரு பக்கம், ஆதிரையின் அம்மா ஆதிரை கல்யாணம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எழுதி வைத்திருந்த டைரியை சிவப்பிரகாசம் ஆதிரையிடம் கொடுக்கிறார். - மருமகள் சீரியலில் இன்று!

Marumagal serial: ‘உள்ளே வரும் ஆதிரையின் அம்மா.. கண்ணீர் கடலில் சிவப்பிரகாசம்’ - மருமகள் சீரியலில் இன்று!
Marumagal serial: ‘உள்ளே வரும் ஆதிரையின் அம்மா.. கண்ணீர் கடலில் சிவப்பிரகாசம்’ - மருமகள் சீரியலில் இன்று!

ஆதிரையின் அம்மா டைரி

இதற்கிடையே ஆதிரையை கல்யாணம் செய்து கொண்டு தனி குடித்தினம் செல்லலாம் என்று நினைத்ததற்கு, நாமே ஆப்பு வைத்துக் கொண்டோமே என்று பிரபு வருத்தப்பட்டு கொண்டிருக்கிறான். மற்றொரு பக்கம், ஆதிரையின் அம்மா ஆதிரை கல்யாணம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எழுதி வைத்திருந்த டைரியை சிவப்பிரகாசம் ஆதிரையிடம் கொடுக்கிறார். 

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

மருமகள் எபிசோடில் நேற்றைய தினம் ஆதிரைக்கும், பிரபுவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, ஏகாம்பரம் பிரச்சினையை கிளப்பிய நிலையில், ஒரு வழியாக அது முடிந்து அவர்கள் தரப்பு கிளம்பி விட்டது. இந்த நிலையில் அவர்களின் ஆள் தேவா உள்ளே இறங்கி, சிவப்பிரகாசத்தை கடத்திச் சென்றான். இதை சற்றும் எதிர்பாராத குடும்பத்தினர், சிவப்பிரகாசத்தை தேடிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே சிவப்பிரகாசம் தேவாவின் ஆட்களைத் தள்ளிவிட்டு ஓடி வந்து கொண்டிருந்த நிலையில், தேவா அவனை ஓங்கி அடித்தான். இதை பார்த்த ஆதிரை ஆக்சன் மூடில் களமிறங்கி அத்தனை ரவுடிகளையும் அடித்து, துவம்சம் செய்தாள். இதை பார்த்த பிரபு, கல்யாணத்திற்கு முன்னரே இவள் இப்படி அடிக்கிறாளே கல்யாணத்திற்கு பின்னர் எந்த மாதிரி எல்லாம் இவள் இருப்பாள் என்று நினைத்து கலங்கி சாமியிடம் குமுறினான்.

கஞ்சனை காய்ச்சிய ஆதிரை

அந்த சமயத்தில், இரண்டு சோபாக்களை வேலை ஆட்கள் எடுத்து சென்று கொண்டிருந்தார்கள். அந்த சோபாவை பற்றி பேசிய பிரபு இந்த சோபாவிற்கு 3000 ரூபாய் கேட்கிறார்கள் என்று தன்னுடைய கஞ்சத்தனத்தை வெளிப்படுத்தினான். இதில் கடுப்பான ஆதிரை நான் தான் உங்களுக்கு 3000 ரூபாய் தருகிறேன் என்று சொல்லிவிட்டேனே, பின்பு ஏன் மீண்டும் மீண்டும் அதையே பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கடுப்பானாள். அந்தக் கடுப்பில் பிரபுவை கண்டுகொள்ளாமல் சென்ற அவள் அவனின் மோதிரத்தையும் விட்டுச் சென்று விட்டாள்.

இதற்கிடையே ஆதிரையின் நிச்சயத்தை நிறுத்த முடியாத விரக்தியில் வீட்டிற்கு வந்த வேல்விழி அப்பாவிடம் கடிந்து கொண்டாள். மேலும் அண்ணனிடமும், நீ எல்லாம் தெண்டத்துக்கு வீட்டில் இருக்கிறாய் என்று சொல்லி தட்டை தூக்கி போட்டு உடைத்தாள். ஒரு கட்டத்தில் அவளை சமாதானப்படுத்திய ஏகாம்பரம், தேவா சென்று இருக்கிறான். அவன் நிச்சயம் ஆதிரைவின் கதையை முடித்திருப்பான் என்று சொல்ல, தேவாவோ அடி வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் வந்தான். இதை பார்த்து மேலும் கொந்தளித்துப் போன வேல்விழி, அங்கு ஆதிரை சாகவில்லை என்றால், அவளுக்கு பதிலாக என் உயிர் பிரிந்து விடும் என்று எச்சரித்துவிட்டு மாடிப்படிக்கட்டில் ஏறினாள் அத்தோடு நேற்றைய மருமகள் எபிசோடு முடிவடைந்தது

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.