Marumagal serial: அடித்து துவம்சம் செய்த ஆதிரை.. கதிகலங்கி போன பிரபு.. அதிர்ச்சியில் குடும்பம்.. மருமகள் சீரியலில் இன்று
Marumagal serial: இவ்வளவு நேரம் நான் பொறுமையாக இருந்தது என்னுடைய அப்பாவிற்காக மட்டும்தானே தவிர, உங்களுக்கு பதிலடி கொடுக்கத் தெரியாமல் இல்லை. நாங்கள் உண்மையாக உழைத்து சம்பாதித்து மேலே வருகிறோம். - மருமகள் சீரியலில் இன்று
மருமகள் சீரியல் தொடர்பாக வெளியான இன்றைய பிரமோவில் ஆதிரை தனது அப்பாவை இழுத்துச் சென்ற ரவுடிகளை அடி வெளுத்து துவம்சம் செய்கிறாள். இதை தில்லை குடும்பத்தினரும் பார்த்துக் கொண்டு அதிர்ந்து போய் நின்றார்கள். குறிப்பாக பிரபு இவள் இப்போதே இந்த வாங்கு வாங்குகிறாள். எதிர்காலத்தில் எப்படியெல்லாம் அடிப்பாளீ என்ற ரீதியில் பயந்து போய் நிற்கிறான்
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
நேற்றைய மருமகள் சீரியலில் ஆதிரைக்கும், பிரபுவுக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் குறுக்கே வந்த ஏகாம்பரம் எதையெதையோ சொல்லி, நிச்சயதார்த்தத்தை நிறுத்துவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்து கொந்தளித்த பிரபு, இவ்வளவு நாள் நீங்கள் எங்கே சென்றீர்கள். எங்களை ஏமாற்றிப் பிழைத்தவர்கள் சொல்லும் முறையெல்லாம் இங்கு செல்லுபடியாகாது என்று சொல்லி பதிலடி கொடுத்தான்.