Marumagal Serial: ‘ஆதிரை நிச்சயத்திற்கு சிக்கல்.. குடைச்சல் கொடுக்கும் மேகலை குடும்பம்!’ - மருமகள் சீரியலில் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marumagal Serial: ‘ஆதிரை நிச்சயத்திற்கு சிக்கல்.. குடைச்சல் கொடுக்கும் மேகலை குடும்பம்!’ - மருமகள் சீரியலில் இன்று!

Marumagal Serial: ‘ஆதிரை நிச்சயத்திற்கு சிக்கல்.. குடைச்சல் கொடுக்கும் மேகலை குடும்பம்!’ - மருமகள் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Published Aug 20, 2024 02:15 PM IST

Marumagal Serial: பிரபுவிற்கு போன் செய்து, உன்னுடைய நிச்சயதார்த்தத்தை நான் நிறுத்திக் காட்டுகிறேன் என்று சவால் விடுகிறாள். - மருமகள் சீரியலில் இன்று!

Marumagal Serial: ‘ஆதிரை நிச்சயத்திற்கு சிக்கல்.. குடைச்சல் கொடுக்கும் மேகலை குடும்பம்!’ - மருமகள் சீரியலில் இன்று!
Marumagal Serial: ‘ஆதிரை நிச்சயத்திற்கு சிக்கல்.. குடைச்சல் கொடுக்கும் மேகலை குடும்பம்!’ - மருமகள் சீரியலில் இன்று!

அத்தோடு மட்டுமல்லாமல் மேகலையின் மகள் பிரபுவிற்கு ஃபோன் செய்து, உன்னுடைய நிச்சயதார்த்தத்தை நான் நிறுத்திக் காட்டுகிறேன் என்று சவால் விடுகிறாள். இன்னொரு பக்கம் சிவப்பிரகாசம் இந்த நிச்சயதார்த்தத்தை தடுப்பதற்காக வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்று ஆதிரையிடம் சொல்கிறார். அத்தோடு இன்றைய புரமோ முடிவுக்கு வருகிறது. 

நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?

மருமகள் சீரியலில், நேற்றைய எபிசோடில் பிரபு நடக்க இருக்கும் நிச்சயதார்த்தத்திற்காக ஆதிரைக்கும் அவளது குடும்பத்திற்கும் ஆடைகளை எடுத்து வந்திருந்தான். ஆனால், அவை அனைத்தும் மிகவும் குறைவான விலை கொண்டதாக இருந்தது. குறிப்பாக நிச்சயதார்த்த புடவையை வெறும் 700 ரூபாய்க்கு எடுத்து வந்திருந்தான் இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, இது குறித்து பிரபுவிடம் கேட்டனர்.

அத்தோடு இல்லாமல், கல்யாணத்திற்கு தேவையான ஆடைகளை வாங்கும் பொழுது, எங்களையும் அழைத்துச் சென்று இருக்கலாமே என்றும் கூறினர். இதையடுத்து பேச ஆரம்பித்த பிரபு, உங்களை அழைத்திருந்தால் நீங்கள் அதிக விலைக்கு ஆடைகளை வாங்கி எனது பர்சை காலி செய்து விடுவீர்கள். அதனால்தான் நான் புத்திசாலித்தனமாக முன்னமே சென்று வாங்கி வந்து விட்டேன் என்று சொன்னான்.

700 ரூபாய்க்கு புடவை!

இதையடுத்து, அவன் 700 ரூபாய்க்கு நிச்சயதார்த்த புடவை எடுத்து வந்திருந்ததை குறித்து பேசிய குடும்பத்தினர், இவ்வளவு குறைவான விலைக்கு நிச்சயதார்த்த புடவை வாங்கி இருக்க கூடாது, சுமார் 7000 ரூபாய்க்காவது நிச்சயதார்த்த புடவை வாங்கி இருக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து கோபம் அடைந்த பிரபு குடும்பத்தினரிடம் சாடினான். இறுதியில் பிரபுவே ஜெயித்தான்.

இதையடுத்து அவன் ரூமிற்குள் செல்ல, ஆதிரை இரவு போன் செய்தாள். அவள் பிரவுவிடம் நிச்சயதார்த்த புடவையை வாங்கி விட்டீர்களா என்று கேட்க, பிரபுவும் தான் வாங்கி விட்டதாகச் சொன்னான். இதையடுத்து அவள் விலை என்ன என்று கேட்க, என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்த பிரபு, ஏழாயிரம் ரூபாய் என்று கூறினான்.

இதையடுத்து ஆதிரை ஏழாயிரம் ரூபாயா என்று கேட்க, நான் இதைவிட அதிகமாக புடவை வாங்க நினைத்தேன் ஆனால், என்னுடைய அப்பா தான் கஞ்சத்தனமாக என் கைகளை கட்டிப்போட்டு விட்டார் என்று பொய் சொன்னான். இதையடுத்து ஆதிரை போனை வைக்க சாமி போன் செய்தான். இதையடுத்து பிரபு சாமியை எனக்கு ஏன் போன் செய்கிறாய் கேட்க, அவன் அதிர்ச்சி ஆகிறான். தொடர்ந்து, ஒரு நண்பனை பார்த்து இப்படியா கேட்பாய் என்ற சாமி கேட்க, பிரபு எனக்கு கொஞ்ச நேரத்தில் ஆதிரை போன் செய்வாள். நீ இடையில் இருந்தால் சரியாக இருக்காது. அவள் என்னை தப்பாக நினைத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது சொல்ல, அத்தோடு எபிசோடு முடிந்தது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: