Marumagal Serial: பத்திரிகை செலவில் பஞ்சாயத்து.. மீண்டும் கோபப்பட்ட ஆதிரை.. பிதற்றும் பிரபு! - மருமகள் சீரியலில் இன்று!-sun tv marumagal serial today episode august 9 2024 indicates prabhu tries to calm down the adhirai - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marumagal Serial: பத்திரிகை செலவில் பஞ்சாயத்து.. மீண்டும் கோபப்பட்ட ஆதிரை.. பிதற்றும் பிரபு! - மருமகள் சீரியலில் இன்று!

Marumagal Serial: பத்திரிகை செலவில் பஞ்சாயத்து.. மீண்டும் கோபப்பட்ட ஆதிரை.. பிதற்றும் பிரபு! - மருமகள் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 09, 2024 07:55 AM IST

Marumagal Serial: பத்திரிக்கை செலவும் அதிகமானதை வைத்து பிரச்சினை செய்தால், தான் மீண்டும் கோபப்படுவேன் என்று நினைத்து மொத்த பழியையும் அப்பாவின் மீது பிரபு போடுவதை ஆதிரை கண்டுபிடித்து விட்டாள். - மருமகள் சீரியலில் இன்று!

Marumagal Serial: பத்திரிகை செலவில் பஞ்சாயத்து.. மீண்டும் கோபப்பட்ட ஆதிரை.. பிதற்றும் பிரபு! - மருமகள் சீரியலில் இன்று!
Marumagal Serial: பத்திரிகை செலவில் பஞ்சாயத்து.. மீண்டும் கோபப்பட்ட ஆதிரை.. பிதற்றும் பிரபு! - மருமகள் சீரியலில் இன்று!

இந்த நிலையில் அந்த விவகாரத்தில் கோபப்படுவது போல நடிக்கும் ஆதிரை, தன்னை பிரபு சமாதானப்படுத்த என்னவெல்லாம் செய்கிறான் என்பதை பார்க்க வேண்டும் என்று கூறி விஷயங்களை நடைமுறைப்படுத்துகிறாள். இத்தகைய விஷயங்கள் புரோமோவில் இடம் பெற்று இருக்கின்றன.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

மருமகள் சீரியலில் திருமண பத்திரிக்கை செலவு தொடர்பான பிரச்சினை போய்க்கொண்டிருந்தது. ஆதிரை வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவு செலவு இழுத்து விடுவார்கள் என்ற பயத்தில் இருந்தான் பிரபு. இதற்கிடையே ஆதிரை மற்றும் அவரது தந்தை மற்றும் சென்று திருமண பத்திரிக்கை பார்க்கலாம் என்று கிளம்பினர். உடன் மனோகரியும் வர ஆசைப்பட, ஏதோ திட்டம் போடுகிறாள் என்று கண்டுபிடித்த சிவபிரகாசம் கண்டு பிடித்துவிட்டார்.

திருமண பத்திரிக்கை பார்க்க சென்ற இடத்தில் ஆதிரை எவ்வளவு தனக்கு செலவு வைப்பாள் என்று தெரியாமல், பிரபு குழப்பத்தில் இருந்தான். இதனையடுத்து 50 ரூபாய் பத்திரிக்கை எடுத்து வைத்து கொண்டு பிரபு தனக்கு இது பிடித்து இருப்பதாக ஆதிரையிடம் சொல்ல, சிவபிரகாசம் இது சின்னதாக இருப்பதாக கூறி, 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை இருக்கும் பத்திரிக்கை வாங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

பத்திரிக்கை விலை பார்த்து அதிர்ச்சி

முதலில் அதனை மறுக்க முயன்ற பிரபு, வேல்விழி செய்த சூழ்ச்சியால் பிரகாசம் பார்த்த பத்திரிக்கையை எடுத்துக்கொள்ள ஒத்துக்கொண்டான். ஆக, அவனுக்கு பத்திரிகை செலவே 75,000 வரை செலவு வந்துவிட்டது. இதனையடுத்து வீட்டிற்கு வந்த பிரபு, தில்லையிடம், நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது.. உங்கள் நண்பனிடம் சொல்லி, குறைவான விலையில் பத்திரிகையை அடிக்கச் சொல்லுமாறு கறாராக கூறிவிட்டான். தில்லை அங்கு அப்படி பேசியது குறித்துக் கேட்க, அது சூழ்நிலை என்று சொல்லி நழுவி விட்டான்.

இதனையடுத்து தில்லை, மகள்களுக்கு வைத்த நகையை அவனிடம் கொடுத்து கல்யாண செலவுக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு சொல்லிக்கொள்ள, அவன் நான் கஞ்சன்தான், ஆனால் மற்றவரின் பணத்திற்கு ஆசைப்படமாட்டேன் என்று சொல்லி, அதனை வாங்க மறுத்து, மரியாதையாக கல்யாண செல்வை குறைக்க சிவப்பிரகாசத்திடம் சென்று பேசுங்கள் என்று சொல்லி விட்டான்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.