Kayal serial: கெளதமை பரோட்டா ஆக்கிய எழில்.. கயல் ரியாக்ஷன் என்ன தெரியுமா? - கயல் சீரியலில் இன்று!-sun tv kayal serial today promo on august 19th 2024 reveals ezhil attck to gautham - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: கெளதமை பரோட்டா ஆக்கிய எழில்.. கயல் ரியாக்ஷன் என்ன தெரியுமா? - கயல் சீரியலில் இன்று!

Kayal serial: கெளதமை பரோட்டா ஆக்கிய எழில்.. கயல் ரியாக்ஷன் என்ன தெரியுமா? - கயல் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 19, 2024 12:26 PM IST

kayal serial: ஆனால் அவன் ஒன்றும் நடக்காதது போல காட்டிக் கொள்ள, கயல், நீ கௌதமை அடித்தது எனக்கு நன்றாக தெரியும் என்று கூறுகிறாள். அத்தோடு இன்றைய புரோமோ முடிவு வருகிறது. -

Kayal serial:  கெளதமை பரோட்டா ஆக்கிய எழில்.. கயல் ரியாக்ஷன் என்ன தெரியுமா? - கயல் சீரியலில் இன்று!
Kayal serial: கெளதமை பரோட்டா ஆக்கிய எழில்.. கயல் ரியாக்ஷன் என்ன தெரியுமா? - கயல் சீரியலில் இன்று!

இன்றைய புரோமோவில் என்ன?

கயல் சீரியலில் இன்று வெளியாகி இருக்கும் புரோமோவில் எழில் கௌதமை அடி வெளுக்கிறான். ஆனால், எழிலோ ஒன்றுமே நடக்காதது போல தன்னை காட்டிக் கொள்கிறான். அடி வாங்கிய கௌதம் அடி கொடுத்தது யார் என்று எனக்கு தெரியவில்லை ஆனால்,அவனது கண்கள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது என்று கதறுகிறான். இதற்கிடையே எழில் கௌதமை வெளுத்தது கயலுக்கு தெரிய வந்த நிலையில், கயல் கை வலிக்கிறதா என்று எழிலிடம் கேட்டாள். ஆனால் அவன் ஒன்றும் நடக்காதது போல காட்டிக் கொள்ள, கயல், நீ கௌதமை அடித்தது எனக்கு நன்றாக தெரியும் என்று கூறுகிறாள். அத்தோடு இன்றைய புரோமோ முடிவு வருகிறது.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

கயல் அம்மாவின் ஆசைக்காக தனது உறவினர்களிடம் சென்று கல்யாணத்திற்கு வருமாறு பத்திரிக்கை வைத்தாள். ஆனால் அவர்கள் அனைவருமே கயலை மிகவும் அவமானப்படுத்தி அனுப்பினார்கள். இதை பார்த்து பொறுக்க முடியாத மூர்த்தி, எழில் மற்றும் குடும்பத்தினர் கயலின் அம்மாவிடம் சென்று கயலை இப்படி பார்ப்பதற்கு எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. கயல் மிகவும் தைரியமான பெண்.

பள்ளியில் ஆசிரியர் தவறு செய்தால, அதை மிகவும் தைரியமாக சொல்லிவிடும் அவள், தற்போது கூனி குறுகி நிற்பது கஷ்டமாக இருப்பதாக குமுறு கிறார்கள் இதையடுத்து கயலின் அம்மா கயலிடம் வந்து, நீ யாரிடமும் சென்று இனி அவமானப்பட வேண்டாம் என்கிறாள். அதற்கு கயல்,முன்னதாக நான் எல்லோரிடமும் எடுத்தறிந்து பேசி வந்திருக்கிறேன். ஆனால் வாழ்க்கை என்பது தன்மானத்தோடு வாழ்வது மட்டுமல்ல, எல்லோருடனும் சேர்ந்து வாழ்வதே வாழ்க்கை என்பதை உன் மூலமாக நான் புரிந்து கொண்டேன்.

அதனால் எனக்கு என்ன அவமானம் நேர்ந்தாலும், உன்னுடைய ஆசையை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றாள். ஆனால் கயல் அம்மா அவளை சமாதானப்படுத்தி தயவுசெய்து வேண்டாம், மேற்கொண்டு நீ அவமானப்பட வேண்டாம் என்று கூறுகிறாள்.

பிரிந்த குடும்பம் ஒன்று சேர எதையும் செய்வேன்

ஆனால் கயலோ நான் இறங்கி செல்வதால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் என்றால், நான் அதற்காக எவ்வளவு வேண்டுமென்றாலும் தாழ்ந்து செல்ல தயாராக இருக்கிறேன் என்று கூறுகிறாள்

 

அதனை தொடர்ந்து கயலும் எழிலும் மருத்துவமனைக்கு வந்து அங்கு இருப்பவர்களுக்கு கல்யாண பத்திரிக்கை வைக்கிறார்கள். அப்போது கௌதம் அங்கு வருகிறான். அவன் எழில் அருகில் இருக்கும் போது கூட கயலிடம் உன் கல்யாணத்தை நிறுத்துவேன் என கூற, டென்ஷன் ஆன எழில் இந்த கல்யாணத்தை நிறுத்த உன் அப்பனின் அப்பனாலும் முடியாது அதையும் மீறி என்னுடைய கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று நினைத்தால், உன்னுடைய உயிர் உன்னிடம் இருக்காது என்று எச்சரிக்கிறான். அதற்கு கௌதம் என்ன மிரட்டுகிறாயா என்று கேட்க, என் கோபத்தின் உயரம் எல்லாம் உனக்கு தெரியாது என்று கூறி மறுபடியும் எச்சரித்து செல்கிறான்

இதையடுத்து கயல் கௌதமின் ஆசைக்கு வளைந்து கொடுக்காத காரணமே கெளதம் இப்படி நடந்து கொள்வதற்கு காரணம் என்று கயல் தோழி எழிலிடம் கூற, அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.